ஞாயிறு, 31 மார்ச், 2013

இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை !!!

வணக்கம்,

"சாதிகள் இல்லையடி பாப்பா! " 
- பாரதி 

" சாதி இரண்டொழிய வேறில்லைசாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"    
ஒளவையார்

இவையெல்லாம் நாம் பள்ளிக்கூட வகுப்புக்களில் படித்ததோடு சரி.

சுதந்திர காற்று நம் நாட்டில் வீச தொடங்கிய நாள் முதல் இருப்பது இந்த சாதி/ மத பிரச்சனையும், சாதிவாரியிலான இடஒதுக்கீடும் தான். ஆரம்ப காலத்தில் இந்தியாவில் ஏற்றதாழ்வு அதிகமாக இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த வித சலுகைகளும், அடிப்படை வசதி வாய்ப்பும் கூட கிடைக்கவில்லை.எல்லா வகையிலும் உயர்ந்த சாதி மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. நம் நாடு விடுதலை பெற்ற பின்னரும் இதே நிலைமை தான் நீடித்தது.

இதனால் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட பல தலைவர்கள்  பிற்படுத்தபட்டோருக்குக்காக போராடினர். இதன் முலம் எல்லார்க்கும்  எல்லா சலுகைகளும்,வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணி, 'சாதிவாரியிலான இடஒதுக்கீடு ' என்ற சட்ட முறையை கொண்டு வந்தனர். அன்று முதல் இன்று வரை, கல்விப்படிப்பு, வேலைவாய்ப்பு, விளையாட்டு, அரசியல் என எல்லா துறைகளிலும் இடஒதுக்கீட்டில் எல்லா வாய்ப்புகளுமே உரிமைகளும் அளிக்கப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் பிற்படுத்தபட்டவருக்கு அங்கீகாரம் கிடைக்க இடஒதுக்கீடு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.இன்றோ,நிலையே தலைகீழ். கிட்டத்தட்ட 50/60 ஆண்டுகளாக இந்த சட்ட முறையினால் பல நலிந்த பிரிவினரும், சாதியால் பிற்படுத்தபட்டவரும், நிறைய சலுகைகளும், வாய்ப்புகளும் பெற்றுள்ளனர். ஆனால் இப்போதும் இடஒதுக்கீடு  தேவையா என்ற கேள்வியே என் மனதில் எழுந்துள்ளது. மற்ற சாதியினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பை  பிற்படுத்தபட்ட சாதியினரே பறித்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. திறமையை பார்க்காமல் சாதிப்பிரிவை  பார்த்து வாய்ப்பு தருவது என்பது எந்த வகையில் நியாயம்?

இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். உதாரணமாக கல்வித்துறையை எடுத்து கொண்டால், உயர்ந்த சாதியை  சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளி படிப்பில் 90 விழுக்காடு எடுத்தபோதிலும், 80 விழுக்காடு எடுத்த பிற்படுத்தபட்ட சாதியை  சேர்ந்த மாணவருக்கே கல்லூரியில் முன்னுரிமை என்ற நிலை வந்து விட்டது.

அரசாங்க வேலைவாய்ப்புகளிலும்  இப்படி தான் நடக்கிறது. ஒரு அரசு நிறுவனத்திற்கு நூறு பேர் தேவை என்றால், ஒவ்வொரு சாதி பிரிவினருக்கும் தனித்தனி சதவிகிதத்தில் ஆட்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். அரசியலிலும் இதே கதை தான்.

இந்த சாதிவாரியிலான இடஒதுக்கீடு ஏன் என்று கேட்டால், எல்லா சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கிறார்கள். இந்த சாதி ரீதியிலான அரசியலையே காட்டுகிறது. தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சாதியை பார்த்து  இடஒதுக்கீடு என்பது தேவையில்லாதது.

சாதி இடஒதுக்கீடுப்பற்றி  பல கிண்டல்,நையாண்டிகளும் இணையதளதிலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன . இந்நிலை நீடிக்குமாயின், கிழே படத்தில் உள்ளது போல் நம் நாட்டில் எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சிர்யபடுவதற்க்கில்லை .



நாம் நாட்டில் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் கல்விபயின்று நல்ல வேலைக்கு சென்ற  போதிலும், ஒரு சில கிராமங்களில் இன்றும்  பிற்படுத்தபட்ட சாதியை சேர்ந்தவருக்கு சமமான /சரியான வசதியும், வாய்ப்பும், உரிமையும் கிடைப்பதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை.  இன்றளவிலும் சாதியை காட்டி கல்வியறிவு கூட கிட்டாத நிலையில் தான் நம் நாடு உள்ளது. இந்த சாதி கொடுமைகளை களைந்து, அவற்றை சீர் செய்ய சட்டங்களை கொண்டு வந்தாலே போதும், இடஒதுக்கீடு பற்றி பேசவே தேவை இல்லை. அரசு எல்லாருக்கும் எல்லா வசதியும், உ ரிமையும் திறமைக்கு ஏற்ப வாய்ப்பும் கிடைக்க வழி செய்து  கொடுத்தாலே தரமான, வளமான சமுதயம் அமையும்.




நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

பி.கு : பதிவை படித்த பின் தங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டம் (comment) இடுமாறு கேட்டு கொள்கிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

5 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சொல்லப்பட்ட கருத்துக்கள் நடந்தால்........................

நல்லது...

நன்றி... நடக்கட்டும்...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே ...

Anto Navis சொன்னது…

ஆச்சரியமான கணினி தகவல்கள், அற்புதமான மென்பொருட்கள், உபயோகமான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் டிப்ஸ்&ட்ரிக்ஸ் போன்ற அரிய தகவல்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த இணையத்தளம் உருவாக்கபட்டது.

தங்களுடைய தளத்தில் தன்னுடைய ப்ளாக்கு இணைப்பு கொடுக்க முடியுமா நண்பா

www.computertricksintamil.blogspot.com

இணைப்புக்கு என்னுடைய தளத்தில் இமேஜ் ஒன்றை வைத்துளேன் அதனை பயன் படுத்தி கொள்ளுங்கள்...

தன்னுடைய தளத்தை உங்களுடைய தளத்தில் இணைத்து கொண்டால் உங்கள் தளத்தின் ஒரு விளம்பர இமேஜ் ஐ நான் என் தளத்தில் விளம்பரம் செயுகிரேன்

நன்றி

RESOLUTIONPLAN.com சொன்னது…

ஆடிட்டர் செல்வமணி :

தரமிக்க பதிவு. உங்கள் படைப்பு பாராட்டுதற்குரியது
மிக்க நன்றி. பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் பெயரிலேயே.

Mobile: 9789779785

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி செல்வமணி அவர்களே !!!