செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இந்திய சினிமா 100 !

வணக்கம்,

1913 ஆம் ஆண்டு , தாதா சாகேப் பால்கே என்பவரால் "ராஜா ஹரிச்சந்திரா" என்ற முதல் முழு நீள திரைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முதல் பல முன்னேற்றங்களுக்கு பிறகு இந்திய சினிமா இப்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது அரசாங்கமும் பல கலை நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. சில திரையரங்குகளில் மக்களின் மனம் கவர்ந்த, நீண்ட நாட்களுக்கு ஓடிய திரைப்படங்கள் திரையிட பட உள்ளன.

இந்திய திரைப்படங்களின் நூறாவது ஆண்டை கொண்டாடும் இந்நேரத்தில், நாம்  எல்லா மொழிகளிலும் உள்ள படங்களின்  சிறப்பையும், கதையையும்  ரசிக்க/ அனுபவிக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் "கூகிள்" தளத்திற்கு சென்று "Indian Cinema 100" என்று தேடி பாருங்கள். உங்களுக்கே புரியும். அந்த பட்டியலில் உள்ள இணையதளங்களில் உலக தரம் வாய்ந்த இந்திய படங்கள்/ எல்லா தரப்பிலும் பிடித்தமான இந்திய படங்கள் 100 என பட்டியலிட்டு கொடுத்திருப்பார்கள். அந்த பட்டியலில் முக்கால்வாசி படங்கள், ஹிந்தி படங்களே. ஏதோ இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நல்ல படங்களே வராத மாதிரி, சொல்லி வைத்தது போல எல்லா வட இந்திய தளத்திலும், இந்தி படங்களே முன் நிறுத்தபட்டு காட்டப்பட்டுள்ளன.

நான் பார்த்த பத்து இணையதளங்களிலும் ஹிந்தி படங்களே முன் நிறுத்தபட்டிருந்தன. சிறந்த 100 படங்களில் முக்காலாசி ஹிந்தி தான்,  மீதம் உள்ள மிச்ச சொச்சம் தான் மலையாளம், தமிழ், அசாம், பெங்காலி, மராத்தி, ஒரியா என மற்ற மொழி திரைப்படங்கள்.

ஹிந்தி இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழி தான். அதிகமாக பேசபடுவதும் ஹிந்தி தான். பாலிவூட்டில் பல உலக தரமான படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் போது எல்லா மொழி படங்களையும் தான் ஒன்றாக தான் நாம் ரசிக்க / எடை போட வேண்டும்.


இன்னும் சில இணையதளங்களில் இந்திய நூற்றாண்டு சினிமாவின் சிறந்த கதாநாயகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திலிப் குமார்,
ராஜ் கபூர், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், மிதுன் சக்ரவர்த்தி, அமிதாப் பச்சன் ஆகியோரும், கதாநாயகிகளில் நர்கிஸ் டட், மது பாலா, வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவி ஆகியோர் பெயரும் படமும் இருந்தது.

அந்த படங்களின் பட்டியலில் 'செவாலியே ' சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பெயர்கள் இல்லை. இந்தியாவில் முதன் முதலில் சர்வதேச அளவில் சிறந்த கதாநாயகன் விருதை "ஆப்ரிக்க-ஆசிய திரைப்பட விழாவில் "  வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக வாங்கியவர். இந்திய சினிமாவின் பெருமையை பற்றி பேசும் போது எப்படி நடிகர் திலகத்தின் பெயரை சொல்லாமல்  இருக்க முடியும்? சினிமாவை  உலக தர வரசையில் கொண்டு சென்றவர் நமது உலக நாயகன். அவரது  படங்கள் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ரஜினிகாந்த் - சொல்லவே வேண்டாம். அவர் நடித்த "முத்து " படம் ஜப்பானில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியுள்ளது. ஆசியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இரண்டாம்  நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் பெயரை விட்டு விட்டு எப்படி இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட முடியும்?

மேலும் மலையாளத்தில் பிரேம் நசிர், செம்மீன் மது, முன்று முறை தேசிய விருது வாங்கிய மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, மோகன் லால்,  தெலுங்கில் என். டி. ராமாராவ், ரங்காராவ் , கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரை விட்டு எப்படி இவர்கள் பட்டியலிட்டார்கள் என தெரியவில்லை.

இந்தியாவின் முதல் 3D படம்மான "மை டியர் குட்டி சாத்தான் "" (மலையாளம்) படத்தை எப்படி மறந்தனர் என புரியவில்லை. எனக்கு தான் தமிழ் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாது என்றால், வலைமனைகளில் பட்டியலிட்டவர்களுக்கும் ஹிந்தி தவிர வேற எந்த மொழியும் தெரியாது போல!

நூறு வருடங்களில் வெளி வந்த சிறந்த படங்களை மொழி வாரியாக வரிசை படுத்த முடியாது என்பது எனக்கும் தெரியும். அது கடினமும் கூட. ஆனால் படங்களை வரிசைபடுத்தும் போது மொழி வாரியிலான பாகுபாடின்றி தரம் பிரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இது என் விருப்பம் மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் எல்லாருடைய விருப்பமும் இதுவாக தான் இருக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
 

9 Comments:

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

தேசியவிருதுகள் கூட அப்படித்தான் வழங்கப்படுகின்றன.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பட்டியல் இட்டவர்களின் தரம் அப்படி...

aavee சொன்னது…

ஹ.. என்ன மாதிரியான ஸமுகத்தில் வாழ்கிறோம் நாம்.. வெட்கம், வேதனை, வெறுப்பு..

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

சரியான விளக்க பதிவு....

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி கலியபெருமாள் ..நீங்கள் சொல்வது சரி தான்..ஆனால் இதை பற்றி எந்த ஒரு ஊடகமும் பெருசாக செய்தி வெளியிடவில்லை..

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்று தனபாலன்..
//பட்டியல் இட்டவர்களின் தரம் அப்படி...

எல்லா இடங்களிலும், தரம் இல்லாதவர்கள் தான் முடிவு எடுக்கும் இடத்தில இருகின்றனர்...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்று கோவை ஆனந்த் விஜய் ..
ஹீ...ஹீ. ..எனக்கும் சேம் பீலிங்!!!

suppaandi சொன்னது…

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி தான்.

Hindi is NOT our national language, in fact, India does not have any national language. Please correct it in your post.

Btw, it's a good article :-)

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி சுப்பாண்டி.. திருத்தி கொண்டேன்...:-)