வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

சிறுகதை - ரிஜிஸ்டர் நம்பர்


வணக்கம்,

வலைப்பதிவில் இது என்னுடைய முதல் முயற்சி... முதல் சிறுகதை...
படித்து விட்டு, உங்கள் மேலான விமர்சனங்களை பகிரவும் !!!

 ரிஜிஸ்டர்  நம்பர்
***************************

"நான் போயிட்டு வரேன் மா..." எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய்.

"ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு  எல்லாம் எடுத்துகிட்டியா ???" - அவன் அம்மா.

"ஆங்... "

" சரி... பத்திரமா போயிட்டு வா.."

கிளம்பும் முன் பாண்ட் உள்-பக்கெட்டில், வீட்டில் டப்பாவிலிருந்து 'சுட்ட' நூறு ரூபாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டான்.

மனதில் நமுட்டு சிரிப்புடன், சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

"ஒன்பதரைக்கு ஒரு ஷோ ; அதைவிட்டா ஒரு மணிக்கு ஷோ.. அம்பதும், முப்பதும் ஒரு எண்பது.. அது ஒரு தொண்ணூறு, நூத்திஇருபது ... ஹ்ம்ம்.... இது போதும்", என மனதில் கணக்கு போட்டப்படியே சென்றுகொண்டிருந்தான்.

சைக்கிளை மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள 'கல்யாண் சைக்கிள் ஸ்டாண்டில்'  போட்டு விட்டு, ஸ்டேஷன் உள்ள சென்று ரயில் ஏறினான்.

மீனம்பாக்கத்தில் ரயிலேறி தாம்பரத்தில் இறங்கி, 'ரோஜா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' எதிரே அவனுடைய கல்லூரி பேருந்தில் தினசரி எட்டு மணிக்கு ஏறி கல்லூரி செல்வது அவன் வழக்கம்.

ஆனால் இன்று,  தினசரி அட்டவணையிலிருந்து சிறு மாற்றம். இன்று  காலேஜுக்கு போக அவனுக்கு மனசில்லை. 'கட்' அடித்துவிட்டு, தாம்பரம் எம்.ஆர். தியேட்டரில் "விருமாண்டி" படம்  பார்த்து விட்டு, மதியம் சாப்பாட்டுக்கு அங்கேயே பன்னோ, பப்ஃபோ எதோ ஒன்று தின்றுவிட்டு, அப்படியே ரயில் ஏறி தாம்பரம்- மவுண்ட் வரை மாறி மாறி போயிட்டு வந்து டயம் பாஸ் செய்துவிட்டு, வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடலாம் என திட்டம் திட்டி இருந்தான். இது அவனுக்கு புதுசு தான். இருந்தாலும், ஒரு சேஞ்சுக்கு முதல் தடவையாக காலேஜ் கட் அடித்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடியது.

ரயில்  பல்லாவரத்தை அடைந்த போது, எதோ யோசித்தவனாய், திடீரென  பிளாட் பாரத்தில் இறங்கி ஒரு ஓரமாக பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான்.

"மணி ஏழே முக்கால் தான் ஆகுது.. இன்னும் நெறைய டைம் இருக்கு. கொஞ்சம் கழிச்சி போகலாம் ." என எண்ணி கொஞ்ச நேரம் ரயில்வே பெஞ்சை தேய்த்தான்.

"இனிமே யாரவது லீவு போடணும்னா, முன்னாடியே ஆபிஸ் ரூம்ல பாலு சாருக்கு போன் பண்ணி சொல்லிடனும். இல்லேன்னா முப்பது ரூபாய் பைன். கம்பல்சரி!" - போன வாரம் வகுப்பில் வந்த சர்குலர் அவனுக்கு தீடீரென ஞாபகம் வந்தது.

முக்கால் மணி நேரம் கழித்து எதோ யோசித்தவனாய், ரயிலேறி தாம்பரதிற்கு கிளம்பி  சென்றான். தாம்பரம் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு பி.சி.ஓ -வில், ஐ.டி கார்டு பார்த்து காலேஜ் அட்மினுக்கு டயல் செய்ததான்.

" ஹலோ! பாலு சாரா ! என்னோடைய பையன் பேரு விஜய் ஆனந்த். அவனுக்கு உடம்பு சரியில்லை. அதனால இன்னக்கி காலேஜ் வர மட்டான் சார்."

"நீங்க யார் பேசுறது???"

"நான் விஜயோட பாஃதர் பேசுறேன்  சார்."

"ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த டிபார்ட்மெண்ட் ? "

"ஐ.டி. செகண்ட் இயர் சார்."

"எந்த செக்க்ஷன்? "

"..அஅஅ...து  தெரியலையே.."

"ஏங்க ! உங்க பையன் எந்த செக்க்ஷன்கூடவா தெரியாம இருப்பீங்க ??? "

"வந்து.. அ..அவன்.. ஐ.டி. 'பி' செக்க்ஷன் சார்.."

"ம்ம்ம்.. உங்க பையன் ரிஜிஸ்டர்  நம்பர் சொல்லுங்க.."

"4...1...9...0...3...2...0...5...0...7..4.. "

"5...0.... ????? "

"....5074 சார்."

"ம்க்கும்...  எந்த பாரான்ட்சு- க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் இவ்வளவு மனப்பாடமாக தெரியும்..?"

"என்னது சார்.?!?!? "

"ம்ம்ம்....சொல்லுங்க..."

" ........................................  "

"நீங்க யார் பேசுறதுனு சொன்னீங்க ??? "

"விஜய்....... பாஃதர் சார்....."

"சொல்லுங்க சார் ... எந்த பாரான்ட்சு- க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் மனப்பாடமாக தெரியும் ?"

"ஆங்... போன் பண்ணா, என் ரிஜிஸ்டர்  நம்பர் கேப்பாங்கனு என் பையன் சொன்னான் சார்..."

"பொய் சொல்லாதீங்க.. நீங்க ஸ்டுடெண்ட் தான் பேசுறீங்கன்னு நல்லா தெரியுது."

"இல்ல சார்.. அது வந்து......"

"ஒண்ணும் சொல்ல வேணாம். நீங்க நாளைக்கு காலேஜ் வாங்க. பார்த்துக்குறேன்... "

போன் துண்டிக்கப்பட்டது. யாரோ அவனை பளார்... பளார்... என செவிட்டில் அறைவது போல இருந்தது.

தலையில் அடித்து கொண்டு, செய்வதறியாது ஒரு பத்து  நிமிஷம் பி.சி.ஓ வாசலிலே நின்றான். இப்போதுஅவனுக்கு சினிமாவுக்கு போவதில் எண்ணம் செல்லவில்லை. வேறு வழியின்றி வீட்டுக்கு போக முடிவு எடுத்து, மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

*****

21 Comments:

கார்த்திக் சரவணன் சொன்னது…

சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க... உண்மையிலேயே நடந்ததா?

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்!!! ஆமாம் ! இது உண்மை சம்பவம் தான்....

முத்துகிருஷ்ணன் சொன்னது…

மிக மிக அழகான நடை. நல்ல அனுபவத்தை தொகுத்து எழுதிஉள்ளாய். நிறைய படி. குறைவாக எழுது.
முத்து மாமா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லா இருக்குங்க... இது போல் தொடரவும்...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி முத்து மாமா !!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்!! தொடர்ந்து எழுத முயற்சிகிறேன்...

bandhu சொன்னது…

தெளிவாக, வாக்கியங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக எழுதியிருக்கிறீர்கள் விமல். நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்குதுங்க. எங்க காலத்தில எல்லாம் இப்படி இல்லீங்க. காலேஜுக்கு வரல்லீன்னா ஒரு நாய் கூட ஏன்னு கேட்க மாட்டாங்க.அது ஒரு பொற்காலம்.

உயிர்நேயம் சொன்னது…

தம்பீ, கதை நன்று. கன்னி முயற்சி என்றாலும் கண்ணியமான நடை. கதையின் தலைப்பை "பதிவு எண்" என தமிழில் வைக்கலாமே?
உரையாடல்களில் ஆங்கிலம் நுழைவது தவிர்க்க முடியாதுதான்.
ஆனால் கதை வர்ணனைகளில் இடம்பெறும் காலேஜ், சைக்கிள் ஸ்டாண்டு, ரயில் ஸ்டேஷன் போன்ற சொற்களைத் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள்.
காலாகாலத்திற்கும் உங்கள் சிறுகதைகள் நின்று வாழும்.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி bandhu அவர்களே!!! நிறைய எழுத முயற்சிக்கிறேன்....

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி அவர்களே!!! தொடர்ந்து வருகை தரவும்...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி உயிர்நேயம் அவர்களே!!!!நீங்கள் சொல்வது சரிதான்... ஆயினும், சாதாரணமாக நடைமுறையில் பேசுவது போல (ஆங்கிலம் கலந்து ) கதையில் இருந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என நினைத்தேன்...

பின் எழுதப்படும் கதைகளில் ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சிக்கிறேன்....

Firing Fox சொன்னது…

Very good try vimalji. I am expecting a lot of stories from you in future. Best wishes

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்று ஜுபேர்.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

சீனு சொன்னது…

ஹா ஹா ஹா இப்படியா விமல் ரிஜிஸ்தர் நம்பர் கொடுத்து மாட்டிபீங்க...

சரி உண்மைய சொல்லுங்க.. இது உண்மையா வாங்கின பல்பு தான

சீனு சொன்னது…

ஓ ஸ்பையிடம் கூறிய பதிலை இப்போதுதான் பார்த்தேன்

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி சீனு....
ஹீ..ஹீ.. . கொஞ்சம் பிரகாசமான 'பல்பு' தான்!!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : சொர்க்கமே என்றாலும்...

கலாகுமரன் சொன்னது…

கதை இயல்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள் (உண்மைக்கு எப்போதும் உயிர்ப்பு அதிகம் )

நாடோடி சொன்னது…

கதை நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்..

Unknown சொன்னது…

Dear Vimal, you have to maintain little bit tempo from the beginning to end.that was missed here,for example from taking money from the box,during the travel some of your relative or friends asking "Why are getting down this station? like .
BUT the concept and you are tried for telling story is appreciated .
ALL THE BEST. KEEP IT UP.!!!!