வணக்கம்,
சிறு சிறு துணுக்குகள், பொம்மை பட ஜோக்குகள் என்று வந்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. ஒன்று, இரண்டு என வார இதழ்களில் மட்டும் வலம் வருகிறது. டுவிட்டரில் போடும் இரண்டு வரி கவிதை, ஹைக்கூ, நச்சுன்னு ஒரு பன்ச்சு லைன்.. இது தான் இப்போ ஃபேமஸ். இணையத்திலும், அலுவல நண்பர் ஜெகதீசனின் தொகுப்புகளிலிருந்தும், என்னை கவர்ந்த சில "நச் பன்ச்சுகளை" இங்கு பகிர்கிறேன்.
நன்றி !!!
-பி .விமல் ராஜ்
சிறு சிறு துணுக்குகள், பொம்மை பட ஜோக்குகள் என்று வந்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. ஒன்று, இரண்டு என வார இதழ்களில் மட்டும் வலம் வருகிறது. டுவிட்டரில் போடும் இரண்டு வரி கவிதை, ஹைக்கூ, நச்சுன்னு ஒரு பன்ச்சு லைன்.. இது தான் இப்போ ஃபேமஸ். இணையத்திலும், அலுவல நண்பர் ஜெகதீசனின் தொகுப்புகளிலிருந்தும், என்னை கவர்ந்த சில "நச் பன்ச்சுகளை" இங்கு பகிர்கிறேன்.
- அவசரமாக ஒரு வெற்றி தேவை. ஒரு பத்து பேருக்கு அட்வைஸ் பண்ற மாதிரி சின்ன வெற்றியாக இருந்தாலும் பரவாயில்லை!
- திங்கள் - ள்கங்தி - ங்கள்தி - திள்கங் - ங்திள்க - கள்திங் - திள்ங்த்...
லிஸ்ட்டுல இதையும் சேத்துக்கனும்! #கருட புராணம் - காபி மெஷின்ல நிஜமாவே காபி தான் வருதா?? இல்ல காபி மெஷின கழுவுன தண்ணி வருதா??
- இட்டு அவி....இட்டவி...இட்டலி...இட்லி..?!
- மிகச்சிறிய 'மா'வட்டம் தோசைதான்!
- உடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும், ஏழைகள் பெரியாஸ்பத்திரிக்கும் போவார்கள்...!
- பையனா ? பொண்ணா ? எனக் கேட்டறிந்த பிரசவத்தை, நார்மலா? சிசேரியானா எனக் கேட்கும்படி மாற்றியமைத்தது நவீன மருத்துவம் !
- முன்னாடி மொபைல் இருந்தா ஆச்சரியப்பட்டாங்க.. அப்புறம் ஃபேஸ்புக்ல அக்கௌண்ட்டான்னு ஆச்சரியப்பட்டாங்க..
இப்ப மொபைல் இல்லையான்னு ஆச்சரியப்படறாங்க.. இனிமே ஃபேஸ்புக்குல அக்கௌண்ட் இல்லையான்னு ஆச்சரியப்படுவாங்க...
#முக்கோண வாழ்க்கை - பிள்ளையார் அம்மா அப்பாவை சுத்தி வந்த மாதிரி, நாம ஃபேஸ்புக், ட்விட்டரை சுத்தி வந்தாலே உலகத்தைப் புரிஞ்சிக்கலாம் போல!
- இக்கரைக்கு அக்கரை பச்சை இல்ல.. வெறும் கான்கிரீட்!
- எத்தனை சிரமப்பட்டோம் என்பதை வெற்றி பெற்ற பின் சொன்னால் தான் காது கொடுத்துக் கேட்பார்கள்.
- அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்
- எதிர் எதிரே கடந்து செல்லும் போது சிறு ஹாரனில் பரிமாறி கொள்ளும் டிரைவர்களின் நட்பும் அழகானதே. கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும் வரம் தான்!
- கல்ல தூக்குறது, காளைய அடக்குறது , இந்த வரிசைல தட்கல் டிக்கெட் போடுறதையும் சேத்திடலாம்.. #சர்வர் டௌன்
- தாத்தாவுக்கு செல்போன் தெரியாது, பேரனுக்கு சிட்டு குருவி தெரியாது. ஒன்றை தந்துவிட்டு இன்னொன்றை விலையாய் பெறுவதுதான் காலத்தின் கடமை.
- 'பொதிகை' மட்டுமே இருந்தப்போ ரிமோட்டுக்கு அவசியம் இல்ல, 'ரிமோட்' வந்த பிறகு பொதிகைக்கு வேலையே இல்ல...
- பேருந்து காதல் கதைகளில், ஹீரோக்கள் ஃபுட்போர்டிலும், ஹீரோயின்கள் ஜன்னல் ஓரத்திலும் உருவாகிறார்கள்!
- பையனையோ, பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும்; அவனுங்களே பாட்டு, டான்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க..
- ஐஸ்கட்டில சட்டை இல்லாம கேப்டன படுக்க வச்சிருப்பானுக, அடுத்தது என்ன நெருப்பான்னு கேப்பாரு பாரு அப்போ துபாய் போனவன் தான் தாவுத்.#நரசிம்மா
- ஒரு காலத்துல 'அடை மழை' ன்னு இருந்தது, அப்புறம் 'அட மழை' ன்னு ஆச்சு, இப்போ 'அடடே மழை' ன்னு ஆகிடும் போல!!!
- பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்.
- காம்பளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட், எனர்ஜியான் குடிக்கலானா கூட குழந்தைகள் வளர்ந்துவிடும். ஆனா குழந்தைகள் குடிக்கலானா இந்த கம்பெனிகள் தான் வளர முடியாது...
- பெங்களூர்ல நான் பாத்ததுலேயே இதான் பெஸ்ட் பிகருங்குற நினைப்பு, ஒவ்வொரு அரைமணிநேரத்துக்கும் மாறுவதுதான் பெங்களூரின் சுவாரஸ்யம். #புதுசாய் குடிபோன ஐ.டி. வாசி.
- நதிக்கரைகளில் நாகரீகம் பிறந்தது. நாகரீகத்தினால் நதிகள் இறந்தது.
- நனைந்து போகும் சிறுமியிடம், "குடைக்குள் வருகிறாயா?" என்றேன். "மழைக்குள் வருகிறீர்களா?", என்றாள்.
- ஐபோன விட அதிக டெக்னாலஜி டேபிள் மேட்-ல தான்!! டொக்..டொக்.. ஐந்து வித உயரங்கள் , ஆறு வித ஏங்கிள்கள்...அப்பாப்பா....
- இளையராஜாவின் பாடல்களை இசைக்கும் அனைத்துப் பேருந்துகளுமே சொகுசுப் பேருந்துதான்..
- சரியாதான் பேரு வச்சிருக்கானுங்க "வலை"தளம்ன்னு.. சிக்குனா வெளியே வரவே முடியாது...
- உலகிலேயே அதிகமுறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் -வயித்து வலி #பள்ளி குழந்தைகள்
- அடுக்கிவைத்த ஹோம்வொர்க் நோட்டை ஆசிரியர் திருத்தும்போது, நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை... #பள்ளிக்கூடம்
- ஆட்டோகாரங்களுக்கு பக்கம் கூட தூரம் தான்... ரியல் எஸ்டேட்காரங்களுக்கு தூரம் கூட பக்கம் தான். #பிஸ்னஸ்
- டாஸ்மாக்ல ஆண்களும், ஜவுளிக்கடைல பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க..
- இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'! #தமிழ் மொழி
- ஒரு மந்தையில் தொலைந்த இரண்டு ஆடுகள், நேருக்குநேர் சந்திக்கும் போது பேச முடியவில்லையே!! # மட்டன் பிரியாணி
- வாழ்த்தலும், பாராட்டும் ஒரு வகை ENERGY TRANSFER தான் !
- எனக்கு என்ன வாங்கி தருவே? - காதலி.
எனக்கு என்ன வாங்கி தந்துருக்கீங்க? - மனைவி.
எனக்கு எதுக்கு வாங்கினே? - அம்மா - ஏதோ ஒரு புரியாத தேவமொழியில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது குழந்தை..வளர்ந்து தொலைத்த வருத்தத்தோடு கேட்டுகொண்டிருந்தேன்.
- சினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்? #வலைபதிவர்கள் #நான்
- சிக்னலில் தன் தாய்க்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும் அந்த குழந்தைக்கு முன் மொத்த மனிதமும் வீழ்ந்து விடுகிறது.!
- ஒரு பஸ். ஒவ்வொரு சீட்டிலும் ஸ்டீரிங் இருக்கும். ஒவ்வொரு பாசஞ்சரும் தங்கள் விருப்பம் போல வண்டியை ஓட்டலாம். இப்படி இருந்தால் வண்டி எப்படி நல்லா ஓடும்??? #பார்லிமென்ட்
- "யானை" என்ற வார்த்தையில் "னை" யானையின் உருவத்தை ஒத்திருப்பது தமிழ் மொழியின் அழகு.
- ஆண்மை என்று சொல்லும் போதே கம்பீரமாக இருப்பதும் ; பெண்மை என்று சொல்லும் போதே மென்மையாக இருப்பதும் நம் மொழியின் அருமை #தமிழ்
- குழந்தையா இருந்தப்ப தட்டி தட்டி தூங்கவெக்க ரொம்ப கஷ்டப்படறோம்...வளர்ந்தப்புறம் தட்டி தட்டி இவங்கள எழுப்பறதுக்குள்ள...உஸ்ஸ்...அப்பாடா....முடியல !!!#அம்மா-அப்பா
- அம்மா! நான் பிறந்தப்புறம் அது நான்தான்னு எப்படி கண்டுபிடிச்ச...?? #குட்டி பையன்
- (நேற்று) குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்: என்னடா அது வெளிச்சம் ??
"மாப்ளே ! மழையிலே நம்மளை யாரோ போட்டோ எடுக்குறாங்கடா !!!
(இன்று) குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்: என்னடா அது வெளிச்சம் ??
"மாப்ளே ! கூகிள் எர்த், கூகிள் மேப்ஸ் -க்கு போட்டோ புடிக்கிறாங்க போல !!! - சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை, முதுமையில் அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும், என் மரணம் மகிழ்ச்சியானதாய் இருக்கும்!
- குழந்தை (வெகுளித்தனமாக) : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்லுவியா ?
அம்மா : அதெப்படி முடியும்…அவளை நான் நம்பவில்லை.
குழந்தை : அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டுட்டு போற???!!!
நன்றி !!!
-பி .விமல் ராஜ்
பதிவு செம டக்கரு... தொடர்ந்து எழுதுங்க...
பதிலளிநீக்குஎன்னுடைய தளம் :- http://parathan20.blogspot.com/
உங்கள் வரவையும் எதிர்பார்கிறேன்... :)
பதிவுக்கு நன்றி உங்கள் கணினிக்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்
பதிலளிநீக்குwonderful.hats off.
பதிலளிநீக்குkalakarthik (karthik amma )
வருகைக்கு நன்றி (விஜயநகரம்) கார்த்தி அம்மா!!! தொடர்ந்து வரகை தரவும்...
பதிலளிநீக்குஇன்று தான் உங்கள் பதிவுகளை படித்தேன்... மிகவும் நன்றாக இருக்கிறது....
சிறப்பு....நன்றிகள் கோடி. . .
பதிலளிநீக்கு