வணக்கம்,
என்னடா நடக்குது நம்ம தமிழ் நாட்டிலே!
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்றதும், மாற்றம் வேண்டும் என்று கூவியவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும், 89 இடங்களில் திமுக சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக நின்றதும் அனைவருக்கும் வியப்பின் ஆச்சிரிய குறியீடு!
கடந்த ஆட்சியின் போது பல அதிருப்திகளை கொண்ட அதிமுக அரசு, இம்முறை அரசாள வாய்ப்பில்லை என பலரும் சொல்லிவந்த நிலையில், தேர்தலில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக சொல்லபடுவது இலவச மின்சாரம், மலிவு விலையில் ஸ்கூட்டர். இது போக தேர்தலுக்கு முன் தொகுதியில் விளையாடிய பணநாயகம். ஆனால் இவை மட்டும் காரணமல்ல.
தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என அறைகூவல் விட்ட எந்த கட்சியும், அவர்கள் மேல் நம்பிக்கை வரவைப்பது போல செய்யவில்லை என்பது தான் உண்மை. தேர்தலில் வெல்ல வெறும் வீராவேசமான பேச்சும், முழக்கமும் மட்டும் போதாது.
2014 தேர்தலில் மோடி பிரதமராக வந்தால் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்வார் என பலரும் நம்பியதால் மட்டுமே, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தது. அதுபோல மக்கள் நல கூட்டணி , பாமக, நாம் தமிழர், பாஜக உட்பட அனைவரும் அந்த நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார்கள். அதனால் தான் மண்ணை கவ்வியுள்ளர்கள். திமுக நூலிழையில்தான் தோற்றுள்ளது. மற்ற குட்டி கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.
சரி! இது போகட்டும் விடுங்க. கடந்த இரு நாட்களாக நடந்த ஆரசியல் நிகழ்வுகளை பாருங்கள்.
அதிமுக தேர்தலில் வென்றதால், நேற்று (23-மே-2016) ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
*) பதவியேற்பு நிகழ்ச்சியின் போது போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ஒரு பேனர் அல்லது அலங்கார தோரணை கூட இல்லையாம்!
*) இனிமேல் அமைச்சர்கள் தம் காலில் விழ வேண்டாம் என முதல்வர் சொல்லியுள்ளராம்! (சமூகதள வழி செய்தி)
*) முதல்வர் பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடல், டாஸ்மாக் கடை நேரம் குறைத்தல், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் தங்கம் என அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார்.
*) நேற்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக-வுக்கும் அழைப்பு போயுள்ளது.
*) ஸ்டாலின் உட்பட சில திமுக பிரதிநிதிகள் நிகழ்ச்சிக்கு போக, அவர்களுக்கு முன் வரிசையில் இடம் தராமல், நான்கு வரிசைகளுக்கு பின் உட்கார இடம் தரப்பட்டுள்ளது. அவர்களும் அமைதியாக நிகழ்ச்சி கடைசி வரை இருந்து பார்த்து, வாழ்த்திவிட்டு வந்திருகின்றனர்.
*) ஸ்டாலின் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், ட்விட்டரில் வாழ்த்தும் போட்டுள்ளார்!
*) அதற்கு பதிலாக கலைஞர் தமது அறிக்கையில், "பதவியேற்பு விழாவில் தி.மு.க.,வினர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தோடு கூட்டமாக ஸ்டாலினுக்கு இடம் தரப்பட்டது. தேர்தலில் தோற்ற சரத் குமாருக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டது", எனக் கூறியுள்ளார்.
*) அதற்கு பொறுப்புள்ள முதல்வராய் பதில் சொல்லும் விதமாக, "இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. திமுகவையோ,ஸ்டாலினையோ அவமான படுத்தும் எண்ணம் இல்லை. விழாவின் மரபுப்படி அமரவைக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். ஸ்டாலின் வருவார் என முன்பே தெரிந்திருந்தால், முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கும் படி சொல்லியிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்", என கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை இவை. இதெல்லாம் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியலுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதொரு ஆரம்பமாக கருதுவோம்!
என்னடா நடக்குது நம்ம தமிழ் நாட்டிலே!
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்றதும், மாற்றம் வேண்டும் என்று கூவியவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும், 89 இடங்களில் திமுக சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக நின்றதும் அனைவருக்கும் வியப்பின் ஆச்சிரிய குறியீடு!
கடந்த ஆட்சியின் போது பல அதிருப்திகளை கொண்ட அதிமுக அரசு, இம்முறை அரசாள வாய்ப்பில்லை என பலரும் சொல்லிவந்த நிலையில், தேர்தலில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக சொல்லபடுவது இலவச மின்சாரம், மலிவு விலையில் ஸ்கூட்டர். இது போக தேர்தலுக்கு முன் தொகுதியில் விளையாடிய பணநாயகம். ஆனால் இவை மட்டும் காரணமல்ல.
தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என அறைகூவல் விட்ட எந்த கட்சியும், அவர்கள் மேல் நம்பிக்கை வரவைப்பது போல செய்யவில்லை என்பது தான் உண்மை. தேர்தலில் வெல்ல வெறும் வீராவேசமான பேச்சும், முழக்கமும் மட்டும் போதாது.
2014 தேர்தலில் மோடி பிரதமராக வந்தால் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்வார் என பலரும் நம்பியதால் மட்டுமே, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தது. அதுபோல மக்கள் நல கூட்டணி , பாமக, நாம் தமிழர், பாஜக உட்பட அனைவரும் அந்த நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார்கள். அதனால் தான் மண்ணை கவ்வியுள்ளர்கள். திமுக நூலிழையில்தான் தோற்றுள்ளது. மற்ற குட்டி கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.
சரி! இது போகட்டும் விடுங்க. கடந்த இரு நாட்களாக நடந்த ஆரசியல் நிகழ்வுகளை பாருங்கள்.
அதிமுக தேர்தலில் வென்றதால், நேற்று (23-மே-2016) ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
*) பதவியேற்பு நிகழ்ச்சியின் போது போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ஒரு பேனர் அல்லது அலங்கார தோரணை கூட இல்லையாம்!
*) இனிமேல் அமைச்சர்கள் தம் காலில் விழ வேண்டாம் என முதல்வர் சொல்லியுள்ளராம்! (சமூகதள வழி செய்தி)
*) முதல்வர் பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடல், டாஸ்மாக் கடை நேரம் குறைத்தல், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் தங்கம் என அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார்.
*) நேற்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக-வுக்கும் அழைப்பு போயுள்ளது.
*) ஸ்டாலின் உட்பட சில திமுக பிரதிநிதிகள் நிகழ்ச்சிக்கு போக, அவர்களுக்கு முன் வரிசையில் இடம் தராமல், நான்கு வரிசைகளுக்கு பின் உட்கார இடம் தரப்பட்டுள்ளது. அவர்களும் அமைதியாக நிகழ்ச்சி கடைசி வரை இருந்து பார்த்து, வாழ்த்திவிட்டு வந்திருகின்றனர்.
*) ஸ்டாலின் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், ட்விட்டரில் வாழ்த்தும் போட்டுள்ளார்!
![]() |
click to enlarge |
*) அதற்கு பொறுப்புள்ள முதல்வராய் பதில் சொல்லும் விதமாக, "இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. திமுகவையோ,ஸ்டாலினையோ அவமான படுத்தும் எண்ணம் இல்லை. விழாவின் மரபுப்படி அமரவைக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். ஸ்டாலின் வருவார் என முன்பே தெரிந்திருந்தால், முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கும் படி சொல்லியிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்", என கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை இவை. இதெல்லாம் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியலுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதொரு ஆரம்பமாக கருதுவோம்!
நன்றி !!!
-பி .விமல் ராஜ்