வணக்கம்,
நம்மில் பலருக்கு தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருப்பதில்லை. எனக்கும் தான்! எப்பாவது தொலைக்காட்சியில் முக்கிய செய்திகள் மட்டும் பார்ப்பேன். நாள் முழுவதும் கணினியும் இணையமுமாக உட்கார்ந்திருப்பதால், முக்கிய நிகழ்வுகளும், செய்திகளும் நமக்கு உடனுக்குடன் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அண்மையில் தெரிந்து விடுகிறது. அதில் முக்கிய பங்கு சமூக வலைதளங்களுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத ஒன்று. இன்று மாலை அலுவலகம் முடிந்து, வீடு திரும்பியவுடன், பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட சில முக்கிய செய்திகளை உங்களிடம் பகிர்கிறேன்.
பகிர்வு 1.
2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுக்களும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வரும் மார்ச் 31, 2014 -க்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். எதற்கு இத்தகைய மாற்றம் என்று கேள்வி எழும் போது, பண வீக்கத்தை சரி செய்ய என்று சொல்லபடுகிறது. அதாவது போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை தடுக்கவும், நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தவும் இந்த திடீர் முடிவு என அதிகாரிகள் கூறுகின்றனர்.
2005-க்கு பிறகு அச்சடித்த ரூபாய் நோட்டுக்களை போலவே போலி (கள்ள ) ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க முடியாதா? என்று தான் எனக்கு புரியவில்லை. கள்ள நோட்டு அடிப்பவர்கள், இதை மட்டும் எப்படி விட்டு வைப்பார்கள் ?? அல்லது இதை தடுக்க வேறு எதாவது புதிய உத்தி இருக்கிறதா??? என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தான் சொல்ல வேண்டும்.
பகிர்வு 2..
ஊட்டி தொட்டபெட்டா மலை பகுதியில் கடந்த 15 நாட்களாக பொதுமக்களுக்கும், வன துறையினருக்கும் தண்ணி காட்டி வந்த புலி இன்று சுட்டு கொல்லப்பட்டது. ஒரு பெண் உட்பட மூன்று பேரையும், கால் நடைகளையும் இரையாக்கி வந்த அந்த புலியை பிடிக்க ரகசிய கேமராக்கள், இரும்பு கூண்டு, கும்கி யானைகள், மோப்ப நாய்கள் என எல்லாவற்றிலும் முயற்ச்சித்து, எதிலும் பிடிபடாமல், இன்று அப்புலியை சுட்டு கொன்று விட்டனர்.
புலியை சுட்டுக் கொல்லாமல், மயக்க மருந்து கொடுத்து பிடித்திருக்கலாமே! எதற்கு நம் தேசிய விலங்கை நாமே சுட்டு கொல்ல வேண்டும் ? அதுவும் அழிந்து வரும் ஒரு உயிரினத்தை ஏன் கொல்ல வேண்டும்? என சமூக ஆர்வலர்கள் சிலர் பொறுப்பு அக்கறையுடன் கோரி வருகின்றனர்.
நம் தேசிய விலங்காம் புலியை கொல்வது சட்டப்படி குற்றம்தான். உயிருடன் பிடிக்க முடியாமல் போனதால் தான் புலியை சுட்டு கொன்றுள்ளனர். அது மட்டுமல்லமல், காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடத்தையும், சுற்றி திரியும் இடங்களையும் அழித்து பொது ஜனமே ஆக்ரமிக்கும் போது , புலி என்ன? எல்லா மிருகமும் ஊருக்குள்ளே வரும் தான். இதை தடுக்க பலரும் போராட்டம் நடத்தி கொண்டு தான் இருகின்றனர். இணையத்திலும், சமூக வலைதளத்திலும் இந்த வனஅழிப்பை ஒழிக்கவும், அதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போராடி வருகின்றனர். பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
இது இப்படியே போனால், "வனத்திலிருந்து வழி தவறி சென்னை நகருக்குள் புகுந்த சிறுத்தை !" என்று நம் பேரன் பேத்திகள் பேஸ்புக்கில் 'ஷேர் ' செய்வார்கள். இது கொஞ்சம் அதிக படியான கற்பனை தான். ஆனால் அப்படி நடந்தாலும் ஆச்சிரியப் படுவதற்க்கில்லை.
இது நமக்கு, நம் மக்களுக்கு, நம் அரசாங்கத்திற்கு என்று புரியுமோ, அன்று வரை நம் இயற்கை செல்வங்கள் எல்லாம், மேலே சொல்லப்பட்ட செல்லாத ரூபாய்களை போல தான் !
நன்றி !!!
-பி .விமல் ராஜ்