வணக்கம்,
ஒரு சில விஷயங்களை பலரும் இப்படி தான் இருக்கும், இப்படி தான் நடக்கும் என்று நினைத்து, அதுவே நிஜம் என நம்பி கொண்டிருப்பார்கள். உதாரணமாக அரசாங்க வேலை என்றால் வேலை செய்ய வேண்டுமென அவசியம் இல்லை; தமிழ் படித்தால் வேலை கிடைக்காது; என சில இருக்கிறது. அதில் ஒன்று தான் ஐ.டி வேலை பற்றிய விஷயங்கள்/கட்டு கதைகள். அதை பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்கிறேன்.
ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள் Comp.Sc/IT யில் குறைந்த பட்சம் பேச்சிலர் டிகிரியாவது பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி இல்லனா கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவன் தானே ஐ.டில வேலை செய்யணும்.?!? அப்படியெல்லாம் ஒரு அவசியமும் இல்லை. ECE, EEE, Mech, Civil, Biotechnology, Chemical, Viscom, Business Management, என ஐ.டிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் படித்தவர்களும் ஐ.டி துறையில் வேலை செய்கிறார்கள். On/Off campus -ல் செலக்ட் ஆன Freshers உள்ளே வந்து விடுகிறார்கள். மற்றவர்கள், கொஞ்சம் முன் அனுபவம் உள்ளவர்களோ ஏதேனும் ஒரு புதிய டெக்னாலஜி ஒன்றை படித்துவிட்டு ஐ.டியில் நுழைந்து விடுகின்றனர். பெரும்பாலும் கம்பெனிகளும் என்ன படித்துவிட்டு வருகிறார்கள் கண்டு கொள்வதில்லை.
சாதாரண BSc/BCA டிகிரியே சாப்டவேர் துறையில் நுழைய போதுமானது. சில கம்பெனிகளில் டிப்ளமா படித்தவர்களை கூட சேர்ந்து கொள்கிறார்கள். 10/15 வருட அனுபவத்திற்கு பிறகு உயர்பதவியில் போக சம்பந்தப்பட்ட துறையில் (domain-ல்) certification முடித்திருந்து, அதற்கான வேலை செய்யும்/வாங்கும் திறனும் இருந்தாலே போதும்.
ஐ.டி வேலை செய்பவர்கள் எல்லாருமே எல்லாம் தெரிந்த அறிவாளியாக தான் இருப்பார்கள்.
சத்தியமாக இல்லை. client க்கு மெயில் டைப் செய்து விட்டு, இது சரியா இருக்கன்னு படிச்சு பாரேன் சொல்பவர்களும்; பத்தாம்/பன்னிரெண்டாம் படிக்கும் பிள்ளைகள் தெரிந்திருக்கும் லேப்டாப்/டெஸ்க்டாப் /சிஸ்டம் பற்றிய சாதாரண விஷயத்தை கூட தெரிந்து வைத்திருக்காதவர்களும் ஐ.டியில் இருக்கதான் செய்கிறார்கள்.
ஐ.டியில் இருப்பவர்கள் அவர்கள் கம்பெனியில் மற்றவர்களுக்கு refer செய்தால் உதவி வேலை கிடைத்து விடும்.
நமக்கு தெரிஞ்ச பையனுக்கு எங்காவது ஐ .டில வேலை வாங்கி கொடுப்பா என நண்பர்கள்/சொந்தக்காரர்கள்/தெரிந்தவர்கள் என சொல்ல கேட்டிருப்பீர்கள். Refer பண்ண மெயில் / emp. portalலில் பதிவு செய்வதோடு ஐ.டி சாமான்யனின் வேலை முடிந்தது. அதிகபட்சம் ஓரிரு முறை HRக்கு நினைவூட்ட முடியும்.அவ்ளோதான! மற்றவையெல்லாம் HR process-ல் தான் உள்ளது. மற்றபடி சிறிய கம்பெனிகள், பெரிய பொறுப்பில் இருக்கும் மேனேஜர்கள் என ஒரு சிலரால் மட்டுமே referral வேலைக்கான வாக்குறுதியை தர முடியும்.
ஐ.டி வேலையில் இருப்பவர்கள் எல்லாருமே சேர்ந்து சில வருடங்களிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள்.
மிக பெரிய கம்பெனியில் (Tier 1) வேலை புதிதாய் வேளையில் சேருபவர்களுக்கு பிடித்தம் போக அதிகபட்சம் 15,000 முதல் 20,000 தான் கிடைக்கும். Tier 2, Tier 3 கம்பெனிகளில் இன்னும் குறையும். Experience உள்ளவர்கள், முன்னாலில் வேலை செய்த கம்பெனியில் எவ்வளவு வாங்கினாரா அதை பொறுத்து தான் புது கம்பெனியில் 30%-40% வரை சம்பளம் உயர்த்தி தரப்படும்.
ஐ.டியில் இருப்பவர்கள் எல்லாருமே Onsite போவார்கள்.
எல்லாருக்கும் போக ஆசைதான். ஆனால் நடப்பது வேறு. Onsite என்பது அவரர் இருக்கிற project/domain பொறுத்தது. எந்த project-ல் வெளிநாடு சென்று வேலை செய்யும் நிர்பந்தம் வருகிறதோ /தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும் (எட்டா) கனி அது. நூற்றில் 20 பேருக்கு கிடைத்தால் இனிது.
ஐ.டி வேலையில் இருப்பவர்கள் ஒரு டெக்னாலஜியில் படித்து அனுபவம் பெறுவதற்குள், அதை விட வேறு ஒரு சிறந்த டெக்னாலஜி வந்து விடும். மாறி மாறி படித்து கொண்டே இருக்க வேண்டும் .
முழுவதும் கதையல்ல..பாதி உண்மை.. இன்று வளர்ந்து வரும் ஐ.டி துறையில் technology /language பல வந்து கொண்டே தான் இருக்கும். நாளடைவில் அதன் அடுத்தடுத்த வெர்ஷன்களை அல்லது மாற்று மென்பொருளை கற்று கொண்டு இருக்க வேண்டும்.
ஐ.டியில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் 40/45 வயதுக்கு மேல் வேலை (நிரந்தரமாக) இருக்காது.
அப்படி இருக்க வாய்ப்பில்லை. 10 வருட அனுபவம் உள்ளவரின் வேலையை ஓரிரு வருட அனுபவம் உள்ளவர் செய்ய முடியாது. அதனால் அனுபவம் கூடும் போது அவர் பதவியும் பொறுப்பும் (சம்பளமும்) கூடி கொண்டே போகும்.
ஐ.டி வேலை நிரந்திரம் இல்லை. எப்பொது வேண்டுமானாலும் வேலை பறிபோக வாய்ப்புண்டு.
உலகமே digital technology, artificial intelligence, cloud computing, IOT என சுழன்று கொண்டிருக்கும் வேளையில், ஐ.டி துறை படுவேகமாக வளர்்ந்து கொண்டே தான் இருக்கும். கொரோனா காலத்தில் கூட தடைபடாமல் ஓடி கொண்டே இருந்தது (வீட்டிலேயே!) ஐ.டி மக்கள் தான். சில சமயங்களில் recession காலங்களில் சில கம்பெனிகள் அடிவாங்கும். அது கூட தற்காலிகம் தான். மீண்டும் எழுந்து அதே போல வேகமாக முன்னேறி கொண்டே இருக்கும்.
இது போல வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கும் சொல்லுங்கள்.
நன்றி!!!
பி.விமல் ராஜ்