சனி, 12 அக்டோபர், 2024
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023
ஜெயிலர் - விமர்சனம்
வணக்கம்,
படத்தின் பெயர் வெளியிட்ட நாள் முதல் எல்லோரையும் போலவே நானும் ஜெயிலர் படத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். First look ப்ரோமோவில் தலைவரின் மாஸ் லுக்கை வெளியிட்டனர். நீல சட்டையும், காக்கி பேண்ட்டும், மூக்கு கண்ணாடியும் உண்மையிலேயே தலைவருக்கு நன்றாகதான் இருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்து வெளியே வந்து கத்தி, துப்பாக்கி எடுப்பதையெல்லாம் பார்க்கும் போது, இன்னொரு தர்பார் போல ஆகிவிட கூடாதுடா சாமி என வேண்டிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக இம்முறை நெல்சன் பெரிய தரமான சம்பவம் செய்ய போகிறார் என நினைத்து கொண்டிருந்தேன்.
ஏற்கனேவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஆடியோ லாஞ்சில் தலைவர் சொன்ன 'காக்கா பருந்து' கதை வேறு மீடியாக்களுக்கு தூபம் போட்டது போல ஆகிவிட்டது. எங்கும் இந்த அலப்பறை தான்.
சூப்பர் ஸ்டாருக்கு முந்தைய இரு படமும் சரியாக போகவில்லை. இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் செமயாய் அடி வாங்கிட்டார். அதனால் இருவருக்குமே ஜெயிலர் ஒரு முக்கியமான படமாக ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் அவரது மாஸை, கெத்தை விட்டுக் கொடுக்காமலிருக்க, அவர் கொடி மீண்டும் பறக்க இந்த படம் ஜெயித்தே ஆக வேண்டும். அதேபோல வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்து கொள்ளவும், தன்னை மீண்டும் நிரூபிக்கவும் நெல்சனுக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும். எப்படியாவது ஓடி விடவேண்டும் என்பதற்காகவா இல்லை கதைக்காகவா என தெரியவில்லை. படம் முழுக்க மெகா நட்சத்திரங்கள் கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இதற்கு பதிலாய் கொஞ்சம் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
செவ்வாய், 15 ஜனவரி, 2019
பேட்ட பராக் !
ஒரு உண்மையான ரஜினி
பாடல்கள் கிட்ட தட்ட எல்லாமே கலர்புல்லாக, பெப்பியாக இருக்கிறது. "மரண மாஸ் " மற்றும் "உல்லால.. உல்லால .." பாட்டும் தாளம் போட்டு கொண்டே நம்மை மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது. "பேட்ட பராக்.." தீம் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் கெத்து காட்டியுள்ளார். வில்லனாக நவாஸுதீன் வந்து அவரும் பங்கை சரியாய் செய்துள்ளார். மற்றபடி பலரும் திரையில் வந்து போனாலும், ரஜினியே சிறப்பாய், நிறைவாய் தெரிகிறார்.
படம் முழுக்க சூப்பர் ஸ்டார் வந்தால் மாஸும், விசிலும் தியேட்டரை கிழிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பேட்ட உண்மையிலேயே மரண மாஸ் !
சினிமா ரசிகனின் பார்வை-
இன்னும் எத்தனை நாளுக்கு தான் சூப்பர் ஸ்டாரை நாங்கள் ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் ஹீரோவாகவே பார்ப்பது என தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அதை தான் எதிர்பார்க்கிறான் என்று வைத்து கொண்டாலும், அவருள் இருக்கும் நடிப்பு திறமையையும், கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் சேர்த்து திரையில் காண்பதே என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் /சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை தான் விரும்புவார்கள்.
இரண்டு நாயகிகள் இருந்தும் இருவரும் நான்கு/ ஐந்து சீன்களுக்கு மேல் வரவில்லை. ஓவர் பில்டப், எல்லோரும் ஹீரோவின் துதி பாடுவது, ஜோக் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்ட முயல்வது, பிளாஷ்-பாக், பகை, பழிவாங்கல் சென்டிமென்ட், காதல் என அதே கமர்சியல் பார்முலா.
ஏற்கனவே கபாலி, காலா, 2.0 என படங்கள் சூப்பர் ஸ்டாரின் பார்முலாவிலிருந்து விலகி வந்திருந்தாலும், திரைக்கதையில் தெளிவோ, பலமோ இல்லாதால் படம் விமர்சனங்களுக்கு உள்ளானது .
ஜிகர்தண்டா அசால்ட் சேது போல, ரமணா பிரொபஸர் போல, வடசென்னை ராஜன் போல ஏதாவது ஒரு செம வெயிட்டான கதாபாத்திரத்திலோ, அரசியல் திரில்லர் போல, மிஸ்ட்ரி திரில்லர் என ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு திரைக்கதையிலோ தலைவரை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் யாரவது இப்படி எடுத்தால் நலம். கோடி புண்ணியம்.
நன்றி!!!
பி.விமல் ராஜ்.
திங்கள், 25 ஜூலை, 2016
கபாலி - விமர்சனம்
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் என்ற செய்தி வந்த உடனையே சற்று மகிழ்ந்தேன். ஏனென்றால் இதுவரை தலைவர் பெரிய இயக்குனர்களுடன் (குழுவுடன்) சேர்ந்து எடுத்த பல படங்கள் ஒரே சாயலில் இருந்ததால், இப்படத்தில் தலைவரை ரஞ்சித் கண்டிப்பாக வித்தியாசமாக, செம மாஸாக காட்டுவார் என ரசிக பெருமக்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே first look போஸ்டர் வந்து அனைவரையும் பேச வைத்தது.
பின்னர் மூன்று மாதம் கழித்து மே தினத்தன்று டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வருவதற்கு இருநாள் முன்னரே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர் நம் வலை மன்னர்கள். கண்டிப்பாக இது எல்லா டீசர் ரெக்கார்டையும் முறியடிக்கும் என சொல்லி வந்தனர். சொல்லி வைத்து அடித்தது போல டீசர் ரிலீசாகி ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் ஹிட்ஸ், 24 மணி நேரத்தில் 50 லட்சம் ஹிட்ஸ் என இதுவரை 2.5 கோடி ஹிட்ஸ்களையும், 4 லட்சம் லைக்ஸ்களையும் தாண்டி போய் கொண்டிருகிறது. யூ-ட்யூப்பில் பல சாதனைகளை முறியடித்துள்ளது கபாலி டீசர். அடுத்த சில நாட்களில் வெளிவந்த டீசரும் ஹிட்டடிக்க, கபாலி ஜுரம் அனைவரையும் பற்றி கொள்ள ஆரம்பித்தது. எங்கு காணினும் #நெருப்புடா #கபாலிடா என சமுக வலைத்தளங்களில் 'டெக்' செய்து கொண்டாடி வருகின்றனர்.
டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே எல்லா சர்வரும் அம்பேலாகி போனது. சிலர் எப்போதும் போல டிக்கெட் அதிக விலை, ரஜினி என்ன செய்தார் என வழக்கமான கேனத்தனமான கேள்வி கணைகளை கேட்டு கொண்டும் இருக்கிறார்கள்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏர் ஏசியா, முத்தூட் பைனான்ஸ், ஏர்டெல் என பல கார்ப்பரேட் கம்பெனிகள் கபாலி குழுவுடன் கைகோர்த்து கொண்டன. தலைவரின் படத்துக்குண்டான அனைத்து ஹைப்புகளும் ஒன்றுசேர நடந்துவிட்டது. சரி... எப்பாடாவது பட்டாவது இம்முறை கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்த்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்தும்.. ம்மச்ச்... கிடைக்கவில்லை.. திங்கட் கிழமை தான் கிடைத்தது. படம் பார்க்கும் வரை கதை தெரிந்து விட கூடாதே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, ரிலீசன்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சில புண்ணியவா(வியா)திகள், படம் அந்த அளவுக்கு இல்லை என கதையை இலைமறைவாய் சொல்லி தொலைந்தனர். சமூக வலைத்தளங்களில் 'ரஜினிக்கு இந்த படமும் படம் அவ்ளோதான்!' என எள்ளி நகையாடினர். என்னதான் நெகட்டிவ் விமர்சனம் பார்த்தாலும், கேட்டாலும் தலைவரை வெள்ளித்திரையில் தரிசித்தே வேண்டும் என முடிவுடன் இன்று படம் பார்த்தேன். #மகிழ்ச்சி
படத்துக்கு இவ்வளவு பில்டப் போதும் என நினைக்கிறன். சரி! விமர்சனத்துக்கு வருவோம். இப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று படஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டதால், எல்லோரும் இதை பாட்ஷா, தளபதி ரேஞ்சுக்கு நினைத்து ஹைப் கொடுத்து விட்டார்கள். தலைவர் படம் என்றாலே தெறிக்கும் மாஸ் காட்சிகள், பன்ஞ்சு டயலாக்குகள், ஸ்டைல் பறக்கும் ரஜினி கிம்மிக்ஸ்கள் என வழக்கமான பார்முலாவையே பார்த்து லயித்து விட்டார்கள் போலும். அதனால் தான் கபாலியை கரித்து கொட்டுகிறார்கள்.
மலேசிய வாழ் தமிழர் ஒருவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக போராடி மனைவி மக்களை பிரிந்து, 25 ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார். பின்னர் மீண்டு வந்து எப்படி குடும்பத்துடன் சேர்ந்தார், எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே கபாலியின் கதை.
உண்மையிலேயே சூப்பர் ஸ்டாருக்கு இது வித்தியாசமான படம். வழக்கமான தன் மசாலா பாணியை விட்டு, 60 வயது மலேசிய டானாக 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்துள்ளார். பல இடங்களில் நடிப்பை கண்களாலேயே வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் மனைவி, மகளின் நியாபகம் வரும் போதும், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என பதறும் போதும் முதிர்ச்சியான நடிப்பை காட்டியுள்ளார். தலைவரின் ஸ்டைல், நடிப்பு, மிடுக்கு, நடை, பாவனை, தோரணை என எதுவுமே மாறவில்லை.
படத்தின் இன்ட்ரோ சீனில் கோட் சூட், கூலிங் கிளாஸ் என ஸ்டைலாக நடப்பதும், பிளாஷ்பேக்கீல் 80-களில் வந்த சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பும் அதிரடியாய் இருக்கிறது. பழைய தமிழ் படங்களை பார்த்தவர்கள், கபாலி என்ற பெயரை கேட்டவுடன் நம்பியார் பட அடியாள் பாத்திரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த எண்ண பிரதிபலிப்பை மாற்ற இந்த மிரட்டலான வசனத்தை ரஞ்சித் வைத்துள்ளார் போலும். “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுகிட்டு, மீச முறுக்கிகிட்டு, லுங்கி கட்டிகிட்டு, நம்பியார் ‘ஏ! கபாலி’ அப்படின்னு சொன்னவுடனே குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நெனச்சியாடா?…… கபாலிடா…” என சூப்பர் ஸ்டார் வசனம் பேசும் போது, ரசிக்காத ரசிகன் ஒருவனும் இல்லை.
நாயகியாக ராதிகா ஆப்தே. குடும்பப்பாங்கான மனைவியாக முகத்தில் பல பாவனைகளை கொடுத்து அசத்துகிறார். சிரித்து, பேசி, அழுது நம்மை கவர்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகளாய், ரிவால்வர் ரீட்டாவாக தன்ஷிகா. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளையும் நடிப்பையும் சுட்டுத்தள்ளிவிடுகிறார்.
மேலும் தினேஷ், ஜான் விஜய், அன்பரசன், ரித்விகா என இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' பட நடிகர்கள் குழு இதிலும் நடித்துள்ளனர். இதில் மட்டும் சற்று மாற்றம் செய்திருக்கலாம். கனமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லனாக தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சோ. அவரது முகம் போலவே நடிப்பும், கதாபாத்திரமும் கொஞ்சம் சப்பையாகவே இருக்கிறது. கிஷோர், நாசர் போன்றோர் நடித்துவிட்டு போய்வுள்ளனர்.
சூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி பட்ட ஒரு படம் எடுத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியே ஆக வேண்டும். கேங்ஸ்டர் படம் என்றாலே வெறும் துப்பாக்கி சூடு, ரத்தம் தெறிக்க கேங் வார், அடிதடி சண்டை, போலீஸ் என்கவுண்டர் என வழக்கமாக எடுக்காமல், தாதாவின் குடும்ப வாழ்க்கையும் காட்டி இமோஷனல் டிராமாவாக எடுத்துள்ளார். மெட்ராஸ் படம் போல இதிலும் நுண்ணியமாய் சாதி / இன அரசியலை புகுத்தியிருப்பது மிக நன்று. ஆனால் படத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருக்கலாம். சூப்பர் ஸ்டாரின் கமர்ஷியல் மசாலா இல்லாமால் நடிப்பும், உணர்ச்சியும் சேர்ந்து இருப்பதால், திரைக்கதையும் காட்சியும் சற்று மெதுவாய் தான் நகர்கிறது. இருப்பினும் தொய்வு வரும் போதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காட்டி நிமிர செய்து விடுகிறார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டாமல் end credit போட்டது இயக்குனரின் புத்திசாலித்தனத்தையும், பயத்தையும் குறிக்கிறது. அதுவரை நமக்கு மகிழ்ச்சி!
படத்தில் தலைவரின் BGM-ல் அதிர்கிறது திரையரங்கம். பாடல்களில் #நெருப்புடா, நெருங்குடா பாடலும், #உலகம் ஒருவனுக்கா பாடலும் தலைவரின் புகழையும், மாஸையும் கூட்டுகிறது. #வீர துறந்திரா பாடல் ஒரு முறை கேட்கலாம் போல உள்ளது. ஒளிப்பதிவாளர் முரளி காமிராவில் மலேசியாவைவும், ரஜினி அடிப்பட்டபின் தங்கியுள்ள இடமும், வீட்டை காட்டிய விதமும் தனி அழகுதான்!
சூப்பர் ஸ்டாரின் பன்ஞ்சு வசனம், மற்ற சில மசாலா வகையறாக்கள் இல்லாததால் படம் பார்க்கும் போது அலுப்பு தட்டுகிறது. மற்றபடி இணையத்திலும் சமூக தளங்களிலும் சொல்வது போல படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. தலைவரின் நடிப்பு, ஸ்டைலுக்காக ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.
கபாலி - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி!
நன்றி !!!
-பி .விமல் ராஜ்
சனி, 12 டிசம்பர், 2015
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
டிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
இது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)
ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.
இங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.
கூகிள் இமேஜ் தளத்தில் சென்று "Thalaivar" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
ஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...
"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்???
தமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்???
தமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்??? "
இது அந்த பில்லியன் டாலர் கேள்வி!
தமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.
மேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!
* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள் கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.
* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும்??? அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பார்கிறார்கள் ? தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... ??? படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா??? புரியவில்லை.
* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன? அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?? அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே?
ஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா? இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா?? இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.
* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார்? என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ??? ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள்? இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள்??? பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.
* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.
* தேசிய நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே? ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ? முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.
* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே? ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.
* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.
* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்!
* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். "தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல..." என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது ??????
மொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்???
யார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.
பின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.