வணக்கம்,
பிள்ளைகளுக்கு பரீட்சை முடிஞ்சாச்சு. வெயிலுக்கும், கோடை விடுமுறைக்கும் சேர்த்து நம்மவர்கள் எதாவது மலை பிரதேசமாக போகலாம் என்று எண்ணினால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். இப்பதிவில் பார்க்க இருப்பதும் மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலை பற்றிதான்.
இயற்கை அன்னை நமக்கு பல செல்வங்களை அள்ளிதந்து கொண்டிருக்கிறாள். கனிம வளங்களாக, நீராக, வன உயிரினங்களாக, மரம், செடி கொடிகள் என பல விலைமதிப்பில்லா செல்வங்களை அளித்து கொண்டிருகிறாள். நம் மக்களோ அறிவியலின் முன்னேற்றம் காரணமாக அந்த செல்வங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கிறார்கள்.
கோடை காலத்தில் மக்கள் விரும்பி போகும் சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கோடை வெயிலுக்கு இதமாக கானல் (குளிர்ந்த வனமும், வனம் சார்ந்த இடமும்) இருப்பதால், மக்கள் கோடை விடுமுறைக்கு இங்கு வந்து விடுகின்றனர்.
பெயருக்கு ஏற்றார் போல பார்க்கும் இடமெல்லாம் மலைகளும், பச்சை பசெலன மரங்களும், காடுகளும், நீருற்றுகளும் இருக்கின்றது. மலைக்கு இடையில் போகும் போது, ஆங்கிலேயர் காலத்தில் விதைத்து வைக்கபட்டு, 100 அடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்களும், சவுக்கு மரங்களும் நம்மை வரவேற்று நிற்கின்றது.
சில இடங்களில் மக்களின் சுவடே தெரியாத வண்ணம் இருந்த கொடைக்கானல் மலை காடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாசு படிய ஆரம்பித்திருகிறது. மக்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள்/ பைகள் சுற்று சூழலை மாசுபடுத்தி வருகிறது. இந்த குப்பைகள் மக்கி மண்ணில் புதையும் போது, நிலத்தடி நீர் வளம் குறைகிறது. நீர்நிலை வறண்டு போகிறது. மழையும் பொய்க்கிறது. விவசாயம் பாதிப்படைகின்றது. மரங்களுக்கு தண்ணீர் இல்லாததால் காட்டில் சில நூற்றாண்டை கடந்த மரங்கள், கோடையில் சில மாதங்களை கூட கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், காட்டில் மலையேற்ற நடைபயணம் செய்பவர்களும், சுற்றுலா வருபவர்களும், குப்பைகளையும், பிளாஸ்டிக் குடுவைகளையும் வனத்தில் வீசி விடுகின்றனர். ஒவ்வொரு தெருமுனையிலும் "பிளாஸ்டிக் குப்பைகளை போடாதீர் ! வனத்தின் தூய்மை காப்பீர் !" என்ற அறிவிப்பு பலகைகள் இருந்தாலும், மக்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. குப்பைகளை உட்கொள்ளும் வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் அடர்ந்த வனத்தில் கட்டப்படும் தங்கும் மாற்றும் உணவு விடுதிகளாலும், வன மிருகங்கள் சுதந்திரமாய் வாழ இடையூறாக இருக்கிறது. கொடை நகராட்சியும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதைவிட என்னொமொரு கண்ணனுக்கு தெரியாத பேராபத்தையும் கொடைக்கானல் நகரமும்,காடுகளும் எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. கொடைக்கானல் காடுகள், பாதரச நச்சு பொருட்களால் மாசுபட்டு கொண்டு இருக்கிறது. இங்குள்ள ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் நம்முடைய உடம்பின் வெப்பத்தை கூறும் தெர்மோமீட்டரை உற்பத்தி செய்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் நச்சு மிகுந்த பாதரசத்தால் சுற்றுசூழலும், வனமும் அழியும் நிலை ஆரம்பித்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில், உடைந்து போன அல்லது உபயோகமில்லாத தெர்மாமீட்டரை சரியான சுத்திகரிப்பு முறையில் இவர்கள் அகற்றுவதில்லை. பாதரசமிகுந்த தெர்மா மீட்டர் கண்ணாடிகளை குப்பை கூளத்திலோ, அல்லது காட்டிலுள்ள கிடங்கிளோ போட்டுவிடுகின்றனர். இதன் மூலம் பாதரசம் காற்றில் பரவி, காடுகளை மாசிபடுத்தி விடுகிறது. இதில் வேலை செய்பவர்களும், நோய் வாய்ப்பட்டு போவதாகவும், இறப்பதாகவும் சொல்கின்றனர். சமூக ஆர்வலர்கள் போராட்டத்தின் பெயரில் 2001-ஆண்டு அரசு இந்நிறுவனத்தை மூட உத்திரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, மலைகளின் இராணி என்று சொல்லப்படும் ஊட்டியும் இது போன்ற சுற்றுசூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சொல்ல போனால், கொடைக்கானலை விட ஊட்டி மிகவும் மாசுபட்டுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். வண்டியிலிருந்து வெளிப்படும் CO2 வாயு, தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் நச்சு காற்று ,கழிவு நீர் போன்றவை ஊட்டியை மேலும் மாசுபடுத்துகிறது. இங்கும், பிளாஸ்டிக்கும், குடுவைகளும் இயற்கை மாசடைய பெரும்பங்கு வகிக்கிறது. இதன் மூலம், ஊட்டி ஏரி மாசடைந்து காணப்படுகிறது. மீன்களும், பிற உயிரினங்களும் அழியும் நிலையில் உள்ளது. உலக புகழ் ரோஜா தோட்டமும் ஊட்டியில் தான் இருக்கிறது. நிலம்,காற்று மாசடைவதால் தாவரங்களும் அழியும் நிலையில் இருக்கிறது.
இது ஊட்டி ,கொடைக்கானலில் மட்டுமல்ல.. நம் நாடெங்கும் இது போன்ற சுற்றுசூழல் கேடுகள் இருக்கிறது. அவைகளை வளரவிட்டால், நம் நாடு பல செல்வங்களை இழக்க வேண்டி வரும்.
வருடந்தோறும் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் பலர் வருகின்றனர். அரசுக்கு வருமானமும் பெருகுகிறது. அதை வைத்தது கொண்டு நம் சுற்று சூழலையும், இயற்கையின் பேரழகையும் காப்பது நம் அரசின் கடமையாகும். அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு மக்களின் கடமையும் தான். இதை இப்படியே விட்டுவிட்டால், வரும் காலங்களில் நம் இயற்கை அன்னை அழகற்ற குரூபி ஆனாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.
நன்றி !!!
-பி .விமல் ராஜ்