வணக்கம்,
நீங்கள் சாலையில் போய் கொண்டிருக்கும் போது யாரவது டீக்கடையில் இரண்டு பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேசி கொண்டு இருந்தால், அது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை பற்றி தான் இருக்கும்.
ஒரு வார காலமாக தினசரி நாளிதழ் முதல், தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள் வரை, அனைவராலும் விவாதிக்கப்படுவது , "ஏன் மோடி இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகவேண்டும் ?". சாதாரண பாமரன் முதல் மெத்த படித்தவன் வரை, டீக்கடை முதல் பெருநிறுவனங்கள் வரை எல்லோராலும் பேசபடுவது இதைப் பற்றிதான். பத்திரிக்கைகளிலும், சமூக வலைமனைகளிலும் மோடியை பற்றி உயர்வாகவும், குஜராத்தில் அவர் நிகழ்த்திய 10 சாதனைகளும் பற்றி தான் விளம்பரம் செய்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் மாபெரும் சாதனையை கண்டு இந்திய மக்கள் அனைவரும் புல்லரித்து, நொந்து நூலாய் போய் உள்ளனர். மேலும் நொந்து போக வேண்டாம் என்று தான், இப்போது மோடியை தலை மீது வைத்து கொண்டு ஆடுகின்றனர்.
முதலில் நரேந்திர மோடியை ஏன் பிரதமராக்க வேண்டும்? என்பதை பார்ப்போம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி.-யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை ஆட்சி செய்து, மூன்றாம் முறை ஆண்டு மாநிலத்தை செம்மையாக ஆண்டு கொண்டிருக்கிறார்.
2001-ல் குஜராத் தொழில் முறையில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று சிறந்த தொழில்முனை நகரமாக மாறியுள்ளது. பல வெளிநாட்டு பெருநிறுவனங்களை குஜராத்தில் ஆரம்பிக்க வைத்தவர் மோடி. அதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பு, மாநிலத்தின் வணிக லாபம், மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலியவற்றில் பெருமளவு முன்னேற்றம் காட்டினார். வறட்சியில் வாடி இருந்த குஜராத் மாநில விவசாயத்தையும் மக்களையும் முன்னேற்ற பாதையில் வழி நடக்க செய்தவர். நீர்/விவசாய மேலாண்மை, தோட்டக்கலை, மின்சார உற்பத்தி என அனைத்து துறையிலும் குஜராத்தை முன்னேற்றம் காண செய்தவர்.
2011-ல் இந்தியாவின் முதன்மை வளர்ந்த மாநிலமாக குஜராத் மாறியுள்ளது. 1960 முதல் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் மிகை மாநிலம் என பெயர் பெற்றது.(கவனிக்க ! நாம் ஊரு தாத்தாவும், அம்மாவும் !!) இந்தியாவில் முதன்முறையாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.
2012-ல் 'குடியுரிமை பாதுகாப்புக்கான' சிறந்த மாநில விருது குஜராத்திற்கு ஐ.பி.என். 7 டைமெண்ட்ஸ் வழங்கியது. மேலும் உலக வங்கியில் கடனாளியாக இருந்த அம்மாநிலம், இன்று 1 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையாக உள்ளது என ஓர் அறிக்கை சொல்கிறது (எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை ; உபயம் - ஃபேஸ் புக்).
இவை அனைத்தும் நரேந்திர மோடியின் கடந்த 10/12 ஆண்டு சாதனைகள் தான். ஆனால் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது தான் அவருடைய அரசியல் சாசனத்தில் உள்ள பெரும் கரும்புள்ளி. குஜராத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை காரணமாக 2002-ல் 2500 மேலானோர் இறந்தனர். இஸ்லாமியர்களை உயிருடன் எரித்தனர். அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தனர். அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர், இதே சாதனை நாயகன் நரேந்திர மோடி தான். எல்லா தரப்பிலிருந்தும் மோடி தான் இந்த கலவரங்களை தூண்டி விட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அதே ஆண்டில் 'பெஸ்ட் பேக்கரி' கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உட்பட, 14 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். (இதே பெஸ்ட் பேக்கரி சம்பவம், உன்னை போல் ஒருவன் படத்தில் தீவிரவாதி சொல்வது போல உலக நாயகன் காட்டியிருப்பார்.) இந்த கலவரங்களுகெல்லாம் காரணம், அப்போதைய பா.ஜா.க. வும், ராஷ்திரிய ஸ்வயம்சேவக் சங்கமும்- RSS (இந்துத்துவம் பற்றி வெறிகொண்டு பேசும் ஒருகட்சி சங்கம்).
1992-ல் பாபர் மசூதி இடித்ததை யாராலும் மறக்க முடியாது. பாரதத்தின் வரலாற்று சின்னமான பாபர் மசூதியை (ராமஜென்மபூமி ) ராமர் பிறந்த இடம் என்று சொல்லி இடித்த பெருமை, பா.ஜ.க தலைவர் அத்வானியையே சாரும். அதனால் இந்து முஸ்லிம்களுக்கிடையே பெரும் கலவரம் நடந்து, அதில் கிட்டதட்ட 2000 -திற்கும் மேலானோர் இறந்தனர். டிசம்பர் 6 , பாபர் மசூதி இடித்த தினம் என்று முஸ்லிம்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, அந்நாளை இந்திய முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளுடன் மக்களை பயத்தில் ஆழ்த்தி புகழை சேர்த்தது அன்றைய பா.ஜ.க. அரசு தான்.
லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது, நாட்டையே கூறு போட்டு விற்பது, கொள்ளையடிப்பது, கொலைகள் செய்வது இவையெல்லாம் சர்வசாதரணமாக இந்தியாவில் நடப்பது தான் என்று வைத்து கொண்டாலும், வகுப்பு வாத கலவரமும், மத கலவரங்களும் அடிக்கடி நடக்கும் மாநிலங்களில் மகாத்மா காந்தி பிறந்த புண்ணிய பூமியும் ஒன்று தான். இவைகள் எல்லாவற்றையும் பூசி முழுகதான் ,தேர்தல் விளம்பரங்களில் "குஜராத்தின் முன்னேற்றம்" பற்றிய ஆவண படங்கள், காணொளி காட்சிகள், சுவரொட்டிகள் என எல்லாமும்.
இவராவது நல்லது செய்வார் என்று மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, மோடிக்கு பதில் நேரு மாமாவின் பேரனே நாட்டை ஆளலாம் போல என்ற முடிவுக்கு வராமல் இருந்தால் போதும்!!! இப்போது சொல்லுங்கள், நாம் ஏன் மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் ???
நன்றி !!!
-பி .விமல் ராஜ்
நீங்கள் சாலையில் போய் கொண்டிருக்கும் போது யாரவது டீக்கடையில் இரண்டு பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேசி கொண்டு இருந்தால், அது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை பற்றி தான் இருக்கும்.
ஒரு வார காலமாக தினசரி நாளிதழ் முதல், தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள் வரை, அனைவராலும் விவாதிக்கப்படுவது , "ஏன் மோடி இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகவேண்டும் ?". சாதாரண பாமரன் முதல் மெத்த படித்தவன் வரை, டீக்கடை முதல் பெருநிறுவனங்கள் வரை எல்லோராலும் பேசபடுவது இதைப் பற்றிதான். பத்திரிக்கைகளிலும், சமூக வலைமனைகளிலும் மோடியை பற்றி உயர்வாகவும், குஜராத்தில் அவர் நிகழ்த்திய 10 சாதனைகளும் பற்றி தான் விளம்பரம் செய்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் மாபெரும் சாதனையை கண்டு இந்திய மக்கள் அனைவரும் புல்லரித்து, நொந்து நூலாய் போய் உள்ளனர். மேலும் நொந்து போக வேண்டாம் என்று தான், இப்போது மோடியை தலை மீது வைத்து கொண்டு ஆடுகின்றனர்.
முதலில் நரேந்திர மோடியை ஏன் பிரதமராக்க வேண்டும்? என்பதை பார்ப்போம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி.-யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை ஆட்சி செய்து, மூன்றாம் முறை ஆண்டு மாநிலத்தை செம்மையாக ஆண்டு கொண்டிருக்கிறார்.
2001-ல் குஜராத் தொழில் முறையில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று சிறந்த தொழில்முனை நகரமாக மாறியுள்ளது. பல வெளிநாட்டு பெருநிறுவனங்களை குஜராத்தில் ஆரம்பிக்க வைத்தவர் மோடி. அதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பு, மாநிலத்தின் வணிக லாபம், மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலியவற்றில் பெருமளவு முன்னேற்றம் காட்டினார். வறட்சியில் வாடி இருந்த குஜராத் மாநில விவசாயத்தையும் மக்களையும் முன்னேற்ற பாதையில் வழி நடக்க செய்தவர். நீர்/விவசாய மேலாண்மை, தோட்டக்கலை, மின்சார உற்பத்தி என அனைத்து துறையிலும் குஜராத்தை முன்னேற்றம் காண செய்தவர்.
2011-ல் இந்தியாவின் முதன்மை வளர்ந்த மாநிலமாக குஜராத் மாறியுள்ளது. 1960 முதல் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் மிகை மாநிலம் என பெயர் பெற்றது.(கவனிக்க ! நாம் ஊரு தாத்தாவும், அம்மாவும் !!) இந்தியாவில் முதன்முறையாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.
2012-ல் 'குடியுரிமை பாதுகாப்புக்கான' சிறந்த மாநில விருது குஜராத்திற்கு ஐ.பி.என். 7 டைமெண்ட்ஸ் வழங்கியது. மேலும் உலக வங்கியில் கடனாளியாக இருந்த அம்மாநிலம், இன்று 1 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையாக உள்ளது என ஓர் அறிக்கை சொல்கிறது (எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை ; உபயம் - ஃபேஸ் புக்).
இவை அனைத்தும் நரேந்திர மோடியின் கடந்த 10/12 ஆண்டு சாதனைகள் தான். ஆனால் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது தான் அவருடைய அரசியல் சாசனத்தில் உள்ள பெரும் கரும்புள்ளி. குஜராத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை காரணமாக 2002-ல் 2500 மேலானோர் இறந்தனர். இஸ்லாமியர்களை உயிருடன் எரித்தனர். அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தனர். அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர், இதே சாதனை நாயகன் நரேந்திர மோடி தான். எல்லா தரப்பிலிருந்தும் மோடி தான் இந்த கலவரங்களை தூண்டி விட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அதே ஆண்டில் 'பெஸ்ட் பேக்கரி' கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உட்பட, 14 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். (இதே பெஸ்ட் பேக்கரி சம்பவம், உன்னை போல் ஒருவன் படத்தில் தீவிரவாதி சொல்வது போல உலக நாயகன் காட்டியிருப்பார்.) இந்த கலவரங்களுகெல்லாம் காரணம், அப்போதைய பா.ஜா.க. வும், ராஷ்திரிய ஸ்வயம்சேவக் சங்கமும்- RSS (இந்துத்துவம் பற்றி வெறிகொண்டு பேசும் ஒரு