ஞாயிறு, 19 மார்ச், 2017

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !

வணக்கம்,

நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ஒரு சில செய்கையை குறிக்கவும், அதன் மூலம் கருத்து சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர்.

பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவோ, ஒரு செயலுக்கு விளக்கம் தரவோ சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து, அறிவுரையும் சொல்லும்.

வழக்காற்றில் இருக்கும் பல பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அவ்வாறு சொல்லப்படும் சில பழமொழிகளின் சரியான விளக்கங்களை இணையத்தில் பல பதிவுகளை தேடி படித்து இங்கு பகிர்ந்துள்ளேன்.

tamil-proverbs-meanings

பழமொழிகள் :

1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பொருள்: 
மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள்: 
ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொருள்: 
கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்: 
'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள்: 
ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4.) களவும் கற்று மற.
பொருள்:
தீய பழக்கமான களவு (திருட்டை)  நாம் கற்று கொண்டு,  மறந்து விட வேண்டும்
உண்மையான பொருள்:
களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!
பொருள்:
சேலை கட்டும் பெண்களை நம்பாதே!
உண்மையான பொருள்:
சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!
சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.

6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
பொருள்:
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.
உண்மையான பொருள்:
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.

7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
பொருள்:
மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.

8.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம். 
பொருள்: 
அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி  நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.
உண்மையான பொருள்:
வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.

9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்: 
ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

10.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
பொருள்: 
மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.
உண்மையான பொருள்:
வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.

11.) ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!
பொருள்: 
நன்மை நடப்பதும், தீமை நடப்பதும்  பெண்கள்  கையில் தான் இருக்கிறது.
உண்மையான பொருள்:
நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

12.) பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!
பொருள்:
பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்;இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாக கிடைக்காது, போருக்கு செல்பவன் படைக்கு பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உயிருக்கு ஆபத்து வராது.
உண்மையான பொருள்:
பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது

13.)  வீட்டுக்கு வீடு வாசப்படி  !!
பொருள்:
ஒவ்வொரு வீட்டுக்கும் ஓவ்வொரு பிரச்னை இருக்கும்.
உண்மையான பொருள்:
மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும்  வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.

14.) கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!
பொருள்:
நாயை பார்க்கும் போதெல்லாம் அதை அடிக்க கல் அகப்படுவதில்லை; அதுபோல கல்லை காணும் போதும் அடிவாங்க நாய் சிக்குவதில்லை.
உண்மையான பொருள்:
கோவிலில் கால பைரவர் சன்னதியில் நாயின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். அதை கலை கண்ணொடு பார்த்தால், நாய் போல தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய்  தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது/செய்வது, அவரவர் பார்வையில்/செயலில் தான் உள்ளது.

15.) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
பொருள்:
மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.
உண்மையான பொருள்:
புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.
மனது புண்பட்டிருக்கும் போது,  தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.

16.) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
பொருள்:
விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.
உண்மையான பொருள்:
ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு  மருந்து உண்ண வேண்டும்.

17.) போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. 
பொருள்:
என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான் போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன் வாத்தியார் வேலைக்கு போவான்.
உண்மையான பொருள்:
மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;
வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.

18.) சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
பொருள்:
சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.
உண்மையான பொருள்:
சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

19.) ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.
பொருள்:
ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.
உண்மையான பொருள்:
மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும்,  போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.

20.) மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.
பொருள்:
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,
உண்மையான பொருள்:
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

இன்னும் நம் வழக்கில் உபயோகப்படுத்தும் பழமொழிகள் நிறையவே இருக்கிறது. அதைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

63 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது...(C&P) நன்றி...

விமல் ராஜ் சொன்னது…

கருத்துக்கும் பதிவுக்கும் நன்றி தனபாலன் அவர்களே !

Avargal Unmaigal சொன்னது…


Nice

Unknown சொன்னது…

அருமையான பதிவு

Guru Manikandan சொன்னது…

Arumai
vaasippulagam.com

Parathan Thiyagalingam சொன்னது…

தமிழ் இனி மெல்ல உயிர்க்கும்.... அருமையான பதிவு...

Unknown சொன்னது…

நல்ல விளக்கம்.... அருமையான பதிவு...

Unknown சொன்னது…

குட்

Unknown சொன்னது…

அருமை...
4)களவும் அகத்து மற-களவு முதலானவற்றை அகத்தில்(உள்ளத்தில்)இருந இரு நீக்கு.

Unknown சொன்னது…

14)கல்லைக் கண்டால் நாயகனைக் காணும்;நாயகனைக் கண்டால் கல்லைக் காணும்.நாயகன்-கடவுள்

கவிதை ப்ரியன் சொன்னது…

அருமையான பதிவு

MarimuthuRangasamy சொன்னது…

அறுமை நன்றி

Unknown சொன்னது…

நன்றி

Unknown சொன்னது…

அருமை இன்னும் அதிகமாக பகிருங்கள்

Unknown சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு... இதை எங்கிருந்து நீங்கள் சேகரித்தீர்கள்....

Unknown சொன்னது…

Good explanation super

Unknown சொன்னது…

Super sir

Unknown சொன்னது…

அருமையான விளக்கம்
.நன்றி

ahilan1 சொன்னது…

அருமை, இன்னும் உள்ளது நிறைய சகோ

Chandru சொன்னது…

பயனுள்ள விளக்கம்

Unknown சொன்னது…

சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்
இது தமிழ் பழமொழியா? விளக்கம் சரி அதென்ன "சஷ்டியில்"
சட்டி - சமையல் பாத்திரம்
அகப்பை - கரன்டி (ஆப்ப-தேங்காய் மூடியில் செய்யும் கரன்டி அல்லது ஆப்ப அல்லது அகப்பை)

Unknown சொன்னது…

சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்

JAYA SINDHU சொன்னது…

அருமை நன்றி

Unknown சொன்னது…

அருமையான விளக்கம்
.நன்றி

Unknown சொன்னது…

அருமை....அருமை...அருமை...

Muthulingam சொன்னது…

கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு. இதற்கு விளக்கம்?

Unknown சொன்னது…

ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன.. அத பயன்படுத்தி இவர் வேறு ஒரு விளக்கம் குடுக்க முயற்சி செய்து இருக்கிறாரே தவிர...உண்மையான விளக்கம் இதுவல்ல...

Unknown சொன்னது…

அருமை ...

Unknown சொன்னது…

Bro enaku enum ethu maathiri kettaikumaa bro

Unknown சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

Nalla nalla palamoligalai kuri santhoshappada vaithirgal .....

Unknown சொன்னது…

ஆசைக்கு அக்காவைக் கட்டி கொஞ்சுறதுக்கு கொழுந்தியாவைக் கட்டிக்கிட்டானாம்..இதற்கான விளக்கம் என்ன என்று சொல்லுங்கள்

Unknown சொன்னது…

Unmaiyana porulai arinthu konden , nandri

Unknown சொன்னது…

பயனுள்ள பதிவு

Unknown சொன்னது…

Superb thanks

Unknown சொன்னது…

கொளம்பர குட்டையில மீன் பிடிக்க முடியுமா

Unknown சொன்னது…

அருமையான விளக்கம்

Kamal சொன்னது…

அருமை நண்பரே
இன்னும் தொடருங்கள்

Somasundaram.Kumanan சொன்னது…

அருமை கருத்து அருமை

Sathish Kumar.M சொன்னது…

Thank you for your great effort sir. Kindly send us more proverbs , it's really useful for us to recall and educate our younger generation as well.


Regards,

Sindu Udhaya

விமல் ராஜ் சொன்னது…

கருத்துக்கும் பதிவுக்கும் நன்றி!

Unknown சொன்னது…

Yuvan shanker

Unknown சொன்னது…

கோ திறம் அறிந்து பெண்ணை கொடு. பா திறம் அறிந்து பிச்சை இடு.

Unknown சொன்னது…

👍👍

E . நாராயணமூர்த்தி சொன்னது…

அருமை அருமை வழக்கில் உள்ள கருத்தும் உண்மையான கருத்தும் கூறி அசர வைத்துவிட்டார்கள் . தங்கள் புலமைக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சி 🙏

Unknown சொன்னது…

அருமையான கருத்துகள்
அற்புதமான பதிவுகள்
இனியும் தொடரட்டும்
உன்னதமான தமிழ் வாக்கியங்கள்

கவிஞர்.பேனா தெய்வம் சொன்னது…

தெளிவு படுத்தியமைக்கு நன்றி

Unknown சொன்னது…

Ehaiku Ethan elluru urundai meaning enna

Unknown சொன்னது…

👍சூப்பரு

Unknown சொன்னது…

தெரியாததையும் தெளிவாக அறியத் தந்தமைக்கு நன்றிகள்

Unknown சொன்னது…

மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது

Unknown சொன்னது…

அருமையான கருத்து

Unknown சொன்னது…

This
is very useful

Unknown சொன்னது…

நம் உடல் என்ற வீடே இறைநிலை என்ற வீட்டிற்கு (முக்தி)வாசற்படி.உயிர் என்ற வீடாகிய வாசற்படியில் அனுதினம் இறைவனை தியானித்து முக்தி என்ற வீட்டை அடையவேண்டும்.இது ஆன்மீகம்.

Unknown சொன்னது…

மிக மிக அருமை

Unknown சொன்னது…

Enaku unavu pathi oru palamozhi vendum pps

Kanmani Leon சொன்னது…

Nice useful

Unknown சொன்னது…

We need more

Unknown சொன்னது…

வாவ்

Unknown சொன்னது…

Interested information

Unknown சொன்னது…

"Apatuku pavam illa."
This palamoli iku enna meaning
Help me

babu சொன்னது…

தங்கள் பதிவு அருமை மிக்க நன்றி 🙏

Unknown சொன்னது…

சிறப்பு. அருமையான விளக்கங்கள். நன்றி.