வணக்கம்,
தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் முதன்முறையாக நடித்து, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் SPYDER. டீசரில் சும்மா ஹைப்புக்காக ஒரு எலக்ட்ரானிக் சிலந்தியை காட்டியுள்ளார்கள்; டிரைலரில் சாதாரண தெலுங்கு ஆக்ஷன் படம் போல காட்டினார்கள். மேலும் இப்படம் ஒரு ஸ்பை திரில்லர் (SPY THRILLER) என சொல்லப்பட்டதால், இப்படத்தின் எதிப்பார்ப்பு கூடியது. அது மட்டுமல்லாமல், டெக்னாலஜி, ஆக்ஷன், ஸ்பை திரில்லர், மாஸ் ஹீரோ என இவற்றோடு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கம் என்பதால் படம் பார்க்க ஆவலுடன் கிளம்பினேன்.
உளவுத்துறையில் பொது மக்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் பணியில் இருக்கிறார் மகேஷ் பாபு. ஒட்டு கேட்டு, அவர்களுக்கு வரும் பிரச்சனைகளிலிருந்து மக்களை காப்பாற்றுகிறார். அப்படி ஒரு நாள் ஒட்டு கேட்கும் போன் காலில், ஒரு முகம் தெரியாத பெண்ணுக்கு உதவ போய், அந்த பெண்ணும், மகேஷ் பாபுவின் தோழியும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி இந்த கொலை மட்டுமில்லாமல், பல தொடர் கொலைகளை செய்து வருகிறான் என விசாரணையில் தெரிகிறது. நாயகன் அந்த சைக்கோ கொலையாளியை தேடி கண்டுபிடித்தாரா, அவன் ஏன் கொலை செய்கிறான், டெக்னாலஜி கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
டோலிவுட் பிரின்சுக்கு இது முதல் நேரடி தமிழ் படம். மகேஷ் பாபு தெலுங்கில் பேசி நடித்தாலே அவர் முகத்தில் பெரியதாய் ரியாக்ஷன் எதுவும் இருக்காது. தமிழில் கேட்கவே வேண்டாம்... திரைக்கு வந்து வசனம் பேசி சென்றிருக்கிறார். ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் செய்கிறார். பெரிதாய் நடிப்பு இல்லையென்றாலும் படம் முழுவதும் தெரிகிறார். நாயகி ரகுல் பிரீத் சிங், மற்ற கமர்ஷியல் படங்களில் ஹீரோயினி வருவது போல இரண்டு பாட்டு, நாலு சீனுக்கு வந்து சென்றுள்ளார். அவர் கதாபாத்திரம் பெரிதாய் சொல்லி கொள்ளும் அளவு இல்லை.
ஹீரோவின் அப்பா, அம்மா, நண்பனாக RJ பாலாஜி, போலீஸ் மேலதிகாரி என பலர் படத்தில் பேருக்கு வந்து சென்றுள்ளனர். இன்னும் எத்தனை படத்தில் தான் போலீஸ் மேலதிகாரிகளை காமெடியாக காட்டுவார்களோ தெரியவில்லை. பிளாஷ்பாக்கில் வரும் சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்த சிறுவன், நடிப்பில் மிரட்டி இருக்கிறான். அவன் ஏன் அப்படி சைக்கோ கொலையாளியானான் என்று சொல்லப்படும் கதையையும் ஓரளவு ஒத்து கொள்வதாய் இருக்கிறது. பரத் சிறு வில்லன் பாத்திரதில் நடித்து சென்றிருக்கிறார்.
இந்த படத்துக்கு பாடல்களே தேவையில்லை. வரிகளில் தெலுங்கு வாடை வருவதால், பாடல்களை பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஸ்பைடர் தீம் மீசிக் மட்டும் த்ரில்லர் படத்திற்கு ஏற்றது போல நன்றாக இருக்கிறது.
படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ளார். இறைவியில் நடித்ததை விட நன்றாகவே நடித்துள்ளார். மகேஷ் பாபு இண்ட்ரோக்கு கிடைத்த கைத்தட்டலைகளை விட இவருக்கு கிடைத்தது அதிகம். ஒருவேளை நான் தமிழில் பார்த்ததானால் என்னவோ, எனக்கு அப்படி தோன்றியுள்ளது. அவ்வப்போது எஸ்.ஜே. சூரியாவின் நக்கல் பேச்சும், குரூர முகபாவனையும் நம்மை அசத்துகிறது. படத்தின் முழு பலமே இவர் நடிப்பு தான்.
முதல் பாதி படு வேகமாய் முடிகிறது. இரண்டாம் பாதி இன்னும் மாஸாக இருக்கும் என நினைத்து கொண்டிருந்தால் ஓவர் மசாலா, லேடிஸ் சென்டிமன்ட் என தலையை சொரிய வைக்கிறார்கள். வில்லனை சாதாரண வீட்டு பெண்களை கொண்டு பிடிப்பது என்பது அவ்வளவு ஈஸியாக எடுத்து கொள்ள முடியவில்லை. இந்த சீன் மட்டும் தான் கொஞ்சம் இடிக்கிறது. பார்க்கும் போது "அட அக்கருமமே!" என சிரிக்க தான் தோன்றுகிறது. அதே போல டெக்னாலஜி கொண்டு வில்லனை கண்டுபிடிப்பது எல்லாம் நன்றாக தான் இருக்கிறது... ஆனால் கொஞ்சமாவது லாஜிக் பார்த்திருக்கலாம். ஹ்ம்ம்.. சரி விடுங்க.. எதோ ஒண்ணு .. படத்தின் ஓட்டத்தில் டெக்னாலஜி ஓட்டைகளை மறந்திடலாம். கிளைமாக்சில் பேருக்கு ஒரு சமூக கருத்தை வலுக்கட்டாயமாய் திணித்துத்துள்ளார்கள். முருகதாஸ் தமிழ் படங்களுக்கு ஒரு மாறியும், தெலுங்கு படத்துக்கு ஒரு மாறியும் கதை பண்ணுவார் என நினைக்கிறேன். இயக்குனர் திரைக்கதையை என்னும் வலையை மட்டும் இன்னும் கொஞ்சம் சீராக பின்னியிருந்தால் SPYDER உண்மையிலேயே செம மாஸ் கமர்ஷியல் த்ரில்லராக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை... ஒரு முறை பார்க்கலாம்!
நன்றி !!!
-பி .விமல் ராஜ்