வணக்கம்,
நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. பெண்களை முன்னிலை படுத்திதான் பல விஷயங்கள் நடந்துள்ளது. பெண் தெய்வங்கள், நதிகளுக்கு பெண்களின் பெயர் என பெண்களுக்கு பல விதத்தில் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழக வரலாற்றில் பெண்களுக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றல்ல, நேற்றல்ல, கடந்த நூற்றாண்டிலல்ல... சங்ககாலம் முதல் பெண்களுக்கு சமூகத்தில் மிகுந்த மரியாதை தரப்பட்டுள்ளது.
பெண்கள் நாடாளவும், அரசபையில் முக்கிய இடத்திலும், கல்வியிலும், வீரத்திலும், வீட்டை பேணி காப்பதிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இது போக, சங்ககாலம் முதல் தேவரடியாரும் தேவதாசிகளும் நம் நாட்டில் இருத்துள்ளனர். இணையத்தில் பெண்களின் சிறப்பு, சங்ககாலத்தில் பெண்கள் மற்றும் இன்னபிற நூல்களின் குறிப்பை கொண்டு இணையத்தில் தேடி படித்ததை இங்கு பகிர்கிறேன்.
திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கோவில்களில் நடனமாடும் பெண்களை தேவதாசி குறிப்பிடுவது வழக்கம். இப்பெண்கள் நடனமாடி (பெரும்பாலும் பரதம், குச்சிப்புடி) விபச்சாரம் செய்பவர்களாகவும், சிலர் பரம்பரை பரம்பரையாய் தேவதாசிகளாக இருப்பதையும் கேட்டிருப்போம். இக்குல பெண்கள் இழி பெண்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.
உண்மையில் தேவதாசி என்பது இழிகுல வம்சமோ அல்லது பாலியல் தொழில் செய்பவர்களோ அல்ல.
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.
சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.
தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.
குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;
கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார். இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
சங்ககால பெண்களின் நிலை:
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். விஜயநகர பேரரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சோழர் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை சொல்லவா வேண்டும்!
ஆனால் காலப்போக்கில் நிலைமை தலைகீழ் ஆனது! பின்னர் 15-16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில், பெண்கள்களின் உரிமைகள் பறிக்கபடுகின்றன. வரதட்சணை கேட்டு வாங்கும் பழக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தேவரடியாரான மதிப்புமிக்க பெண்கள் கோவில்களுக்குள் சென்று சேவை/ பூசை செய்ய தடை செய்யப்படுகிறது. பெண்களுக்கு இவ்வளவு அதிகாரம் ஏன் என்ற கேள்வி சில ஆதிக்க சாதி மக்களிடம் எழ, உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்படுகிறது. கோவில்களில் நடனமாடும் தேவரடியாரை சில சிற்றரசுகளும், செல்வந்தர்களும் அவர்களுக்காக தனியே ஆட அழைக்க, அவர்கள் ராஜதாசி ஆனார்கள். பின்னர் கோவிலில் நடனமாடும் பெண்களை எல்லோரும் தேவதாசிகளாக்கபட்டு, நாடு முழுவது மெல்ல மெல்ல தேவரடியார் இனம் தேவதாசிகளாக மா(ற்)றப்பட்டது.
தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் திராவிடரின் கூற்றுப்படி பொதுமகளிர்.
தேவதாசிகள் கோயிலுக்கு 'நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்' ஆனார்கள். இவர்கள் கோயிலின் பேரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். 'தாசி' எனும் சொல், 'அடிமை' என்ற பொருள் கொண்டது. 'அடியார்' என்பதோ, 'ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்' என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.
அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்த தேவரடியார்களை தேவதாசிகளாக மாற்றி பொருளுக்காக விபசாரம் செய்ய வைத்தனர். அதன் பின்னும் தேவரடியாரான பெண்கள் சிலர் கோவில்களில் நடனமாடி (பரதம்) பிழைத்து வந்தனர். பரதநாட்டியத்திற்கு தேவிடியா கச்சேரி என்ற பெயரும் உண்டு என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். பின்னர் ஆங்கிலேய ஆட்சிக்கால ஆரம்பத்தில் கோவில்களில் கலைகள் அவ்வளவாக வளரவில்லை; வளரவும் விடவில்லை. அதனால் தேவரடியாரை அப்போதிருந்த ஜமீன்தார்கள் மற்றும் சிற்றரசுகள் முழு நேர தேவதாசிகளாக்கினர். பெண்கள் பருவம் அடைந்ததும் பொட்டுகட்டி விட்டு, 'நித்திய சுமங்கலியாக' மாற்றி, அவர்களை தேவதாசிகளாகவே மாற்றிவிட்டனர். அதை ஒரு சடங்காகவே மாற்றி அவர்கள் பரம்பரையே வேசிகளாக மாற்றிவிட்டனர்.
இப்படி தான் தேவரடியாள் என்ற பெயர் பின்னாளில் தேவிடியாள் என்ற வசைமொழி பெயரானது போலும்!
தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தேவதாசிகள் இருந்தனர். ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா என் பல பெண்கள் இவ்வம்சத்தில் இருந்தனர். இவர்கள் அனைவருமே கோவிலில் பணிபுரியும் குலத்தை சேர்ந்தவர்கள்தான். நாளடைவில் இவர்களை தாசிகளாகியது நமது சமூகம். பின்னர் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய பெண்கள் மேம்பாட்டு ஆணையமும், சமூக புரட்சியாளர்களான ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், தந்தை பெரியார் போன்றோர் எதிர்த்து போராடி, இந்திய அரசு தேவதாசி முறையை ஒழித்துவிட்டது. இன்று இந்தியா முழுவதும் தேவதாசிகளே இல்லை என சொல்லப்படுகிறது,
கடந்த கால வரலாற்றில் இப்படிதான் பெண்கள் போற்றப்பட்டும், தூற்றப்பட்டும் இருக்கிறார்கள். இனியாவது பெண்மையை மதிப்போம்;
பெண்ணினத்தை காப்போம்!
நன்றி !!!
-பி .விமல் ராஜ்
நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. பெண்களை முன்னிலை படுத்திதான் பல விஷயங்கள் நடந்துள்ளது. பெண் தெய்வங்கள், நதிகளுக்கு பெண்களின் பெயர் என பெண்களுக்கு பல விதத்தில் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழக வரலாற்றில் பெண்களுக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றல்ல, நேற்றல்ல, கடந்த நூற்றாண்டிலல்ல... சங்ககாலம் முதல் பெண்களுக்கு சமூகத்தில் மிகுந்த மரியாதை தரப்பட்டுள்ளது.
பெண்கள் நாடாளவும், அரசபையில் முக்கிய இடத்திலும், கல்வியிலும், வீரத்திலும், வீட்டை பேணி காப்பதிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இது போக, சங்ககாலம் முதல் தேவரடியாரும் தேவதாசிகளும் நம் நாட்டில் இருத்துள்ளனர். இணையத்தில் பெண்களின் சிறப்பு, சங்ககாலத்தில் பெண்கள் மற்றும் இன்னபிற நூல்களின் குறிப்பை கொண்டு இணையத்தில் தேடி படித்ததை இங்கு பகிர்கிறேன்.
![]() |
கோப்பு படம் |