ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல !

வணக்கம்,

இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

அன்று முதல் இன்று வரை, ஒருவர் எதாவது தவறு செய்தாலோ அல்லது முறையில்லாமல் நமக்கு எதிராய் செய்தாலோ அவரை திட்டுவதற்கு, அவருடைய பிறப்பையோ, உறவையோ, சாதியையோ வைத்து கெட்ட வார்த்தையில் திட்டுவது ஒரு சிலரிடம் பழக்கமாகி விட்டது.

நம்முடைய கோபம் உச்சம் அடையும் போது, அதை வெளிக்காட்டி கொள்ள வருபவைதான் இந்த கெட்ட வார்த்தைகள். சிலரின் கோபம்  சாதாரண வார்த்தைகளில் அறிவுகெட்ட நாயே, பேயே, முண்டம், பொறுக்கி என திட்டி விட்டு அடங்கி விடும். ஆனால் சிலரின் கோபம், கொச்சை கொச்சையாய் எதிராளியை திட்டி தீர்த்தால் தான் அடங்கும்.


யாரும் அவர்தம் பெற்றோர் மூலமாகவோ, பள்ளிகூட பாடம் மூலமாகவோ கெட்ட வார்த்தைகளை கற்று கொள்வதில்லை. பதின்பருவ வயது ஆரம்பிக்கும் போது பிள்ளைகள் தன் உடன் படிக்கும் சிறார்களோடு/ சிறுமிகளோடு சேர்ந்து கற்று கொண்டு விடுகின்றனர். அவர்களுக்கு வேறு யாரோ சொல்லி தந்து விடுகின்றனர். பள்ளி செல்லாச் சிறார்களும் அவர்கள் வயதுடையவரிடமிருந்து கற்று கொள்கின்றனர். சுற்றத்தாரும், உடன் இருப்பவரும், ஊடகங்களும் வார்த்தைகளை எப்படி உபயோகிகின்றனர் என்பதை வைத்தே இளைய சமுதாயம் வளர்கிறது.

கல்லூரி மாணவர்கள் என்றால் பெண்களை கிண்டல் செய்பவர்கள் என்றும், வார்த்தைக்கு வார்த்தை ..த்தா .. ங்கொம்மா.. என்று முற்சேர்க்கையிட்டு (Prefix) பேசுவார்கள் என்று தான் திரையில் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்துவிட்டு வரும் நம்மவர்களும், பெரும்பாலும் அப்படி தான் பேசுகின்றனர்.  

திரைப்படங்களில் வரும் வெகுஜன கதாநாயகர்கள் தகாத வார்த்தைகளை திரையில் உபயோகிக்கின்றனர். திரையில் வெளியிடப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு தொலைகாட்சியில் காட்டும் போது அந்த வசனத்தை மட்டும் வாயசைக்க வைத்து விடுகின்றனர். ஒரு சில சினிமா வசன உதாரணகள்...

திஸ் இஸ் மை ஃபக்கிங் கேம் ! - THIS IS MY FUCKING GAME !

ஏய் பாடு ! கம்மினாட்டி! அவனை ஏன்டா அடிச்ச  ?

..த்தா ! ...போடறா அவன....

நீங்கல்லாம் லவ் பண்ணி ,கல்யாணம் செஞ்சு மயிறையா புடுங்க போறீங்க? 

.த்தா .. தேவிடியா பசங்களா.. இதுக்கு தாண்டா நான் சட்டை போடறது... வேலையை பாருங்கடா ...

ஒம்மாள ! உனக்கு எப்படிடா தெரியும் ? 

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் வெற்றிகரமாக வெள்ளி திரையில் வந்தவை. உணர்வுபூர்வமான காட்சிகளுக்காக இது மாதிரி வசனங்களை திரையில் உலவ விடபடுகின்றன. பத்து / பதினைந்து  வருடங்களுக்கு முன்னால், படங்களில் இது போன்ற வசனங்கள் அவ்வளவாக வந்ததில்லை. அப்படியே வந்தாலும் ஒன்று, இரண்டு என மூன்றாம் தர படங்களில் மட்டுமே வரும்.

இந்த பதிவு வேறு யாரையோ பற்றி சொல்வது போல இருந்தாலும், நம்மில் பலருக்கு இந்த கெட்டப்பழக்கம் உண்டு. கொஞ்சம் வெட்கி தலைகுனியும் செயலாக இருந்தாலும்; மறுக்க முடியாத ஒன்று. 

பெரும்பாலும் கெட்ட வார்த்தைகள் பெண்களை இழிவு செய்வது போலவும், மனித உடல் பாகத்தினை குறிக்கும்படி தான் இருக்கிறது. அவன் தாயை, தமக்கையை, மனைவியை கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்க்கபடுகிறது.

தகாத வார்த்தைகளை உபயோகிப்பவன், திட்டு வாங்குபவர் மன நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  நாட்டில் உலவும் பாலியல் வறட்சியின் காரணமாக தான் இது போன்ற கெட்ட வார்த்தைகள் வாயிலிருந்து வந்து விழுகின்றது என ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

நம் பாரத தாய் திருநாடு பெண்களின் பெருமை பேசும் ஒரு தேசம். நாம் பெண்களின் பெருமையையும், அடிப்படை மனித மரியாதையையும் போற்றி பாதுகாக்காவிட்டலும் பரவில்லை; குறைந்தது மதிக்கவாவது கற்று கொள்ள வேண்டும்.

பின் குறிப்பு: இப்பதிவு நண்பர் ராஜ்மோகனின்  "ரேடியோ மோகன்"  வலைப்பூவில் ஏச்சு வார்த்தைகள்   பதிவை  தழுவி எழுதப்பட்டது.நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

14 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்ன கொடுமை விமல் சார்...?!!!!!

கும்மாச்சி சொன்னது…

உண்மைதான், கெட்டவார்த்தைகள் இப்பொழுது வரும் படங்களில் அடிக்கடி வருகின்றன.

நல்ல பதிவு.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி கும்மாச்சி!!!

விமல் ராஜ் சொன்னது…

திண்டுகல் தனபாலன், என்ன சொல்கிறீர்கள் என தெளிவாக
புரியவில்லை...இருந்தாலும் வருகைக்கு நன்றி!!!!

Philosophy Prabhakaran சொன்னது…

பாஸு...

இப்பதான் நீங்க சக்சஸ்ஃபுல் வலைப்பதிவர் ஆவதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறீர்கள்... வாழ்த்துகள்...

மயிறு என்பது எப்போதிலிருந்து கெட்டவார்த்தை லிஸ்டில் சேர்ந்தது...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி பிரபா..
// மயிறு என்பது எப்போதிலிருந்து கெட்டவார்த்தை லிஸ்டில் சேர்ந்தது..

நான் எட்டாவது படிக்கும் போது கெட்ட வார்த்தை சொல்லி கொ(கெ)டுத்தவன் அப்படி தான் சொன்னான்..

ஜீவன் சுப்பு சொன்னது…

இன்னைக்கு தேதிக்கு மயிறு மார்க்கெட் தான் உச்சத்துல இருக்கு ...

மயிராண்டி ன்னு சொன்னா கோவப்படப்பூடாது ... சந்தோசப்படனும் :)

Unknown சொன்னது…

oru penn endra vagayil ithai nan aamothikkiren. male shavanism esp. num nattil anngal manathil ooripoiullathu. mattrigondal nallathu..Good..Keep it up!..

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி ஜெயா அவர்களே !!!

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

ஆரம்பிக்கும்போது நான் கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்..விமல் சார் என்ன இந்த மாதிரி பதிவுலாம் எழுத ஆரம்பிச்சிட்டாரேனு நினைச்சன்..முழுசா படிச்சதுக்கப்புறம்தான் புரிஞ்சது...நல்ல பதிவுதான்...ஆனால் ஒருசில தவறான மனிதர்களைப் பார்க்கும்போது தவறி வாயில் வந்துவிடுகிறது..குறிப்பாக சாலையில் வாகனம் ஓட்டிச்செல்லும்போது எதிரில் தாறுமாறாக வண்டி ஓட்டிவரும் சில நாதாரிகளைப் பார்க்கும்போது அனிச்சையாக அசிங்கமாகத் திட்டத் தோன்றுகிறது(மனதிற்குள்தான்)..தவிர்க்க முயற்சிக்கிறேன் நண்பரே...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி கலிய பெருமாள் !!!
அப்ப என்ன ரொம்ப நல்லவனுக்கு முடிவு பண்ணிடீங்க... மிக்க நன்றி..

Unknown சொன்னது…

IDHU ORU POLAPPU IDUKKU COMMENTS VERA ...

nimmy சொன்னது…

உதாரணமாக சிலவற்றை பதிவிடவும்

கண்ணர் குலத்தின் வரலாறும் சிறப்புகளும் சொன்னது…

உண்மை ஐயா! வெண்ணை என்ற சொல் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றது! பள்ளியில் படிக்கும் என் மகள் வெண்ணை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டாள். என்ன பதில் சொல்வது எனத்தெரியவில்லை! அது ஒரு கெட்ட வார்த்தை என்று மட்டும் என்னால் கூற முடிந்தது!