சனி, 16 ஏப்ரல், 2016

படித்த முட்டாள்கள்!

வணக்கம்,

சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு.

நாம் அன்றாட (காலைக்) கடனை முடித்துவிட்டு, துடைத்து கொள்ளும் பழக்கம் இந்தியன் ஸ்டைல் கக்கூஸ் டாய்லெட்டில் இல்லை தான் என்றாலும், இப்போதைய நவீன வாழ்வில் இயல்பான ஒன்றாய் மாறி கொண்டிருக்கிறது.

மதிய வேளையில் ரெஸ்ட் ரூமில் இருந்த urinal யாவும் ரிப்பேர் / கிளீனிங்கில் இருக்கவே, உள்ளே சென்றேன். உள்ள இருந்த பேசினில் டாய்லெட் பேப்பர்கள் கசக்கி போடப்பட்டு ∴ப்ளஷ் செய்த தண்ணீர் வெளியேற முடியாமல் அந்த பேசினை அடைத்து கொண்டிருந்தன. அன்று மட்டுமல்ல. கடந்த இரு வாரங்களில் இதை  நான்காம் முறை பார்க்கிறேன். போன முறை ஹவுஸ் கீப்பிங் அலுவலர் ஒருவர் ஒரு கை கொள்ளாத அளவு டாய்லெட் பேப்பர்களை எடுத்து சென்றார். நான் அவரை பார்ப்பதை அவர் பார்த்துவிட்டு, "தினமும் இப்படி தான் சார் எடுத்து போடறேன்.." என்று வலியுடன் சொன்னார்.

கழிவறை சுத்தம் செய்வது அவர்கள் வேலை தான். ஆனால், பேசினில் கைவிட்டு நாம் துடைத்து கசக்கி எறிந்த பேப்பர்களை எடுக்க வேண்டும் என்ற தலையெழுத்தா அவர்களுக்கு? பின்னர் அதே கைகளில் தான் அவர்கள் சாப்பாடும் சாப்பிட வேண்டும்.. ச்சே... என்ன ஒரு கொடுமை..

dont garbage toilet basins

இது ஏதோ படிப்பறிவில்லாத மக்கள் 'இருக்கும்' இடம் என்றாலும் பரவாயில்லை என சொல்லி சொல்லலாம். இது மெத்த படித்த ஐ.டி பணியாளர்கள் 'இருக்கும்' கார்ப்பரேட் அலுவலகம். நீங்கள் யாராவது கழுவும் கையில் சாப்பிடுவீர்களா? யோசியுங்கள். பிறகு ஏன் சிலர் ரெஸ்ட் ரூமில் உள்ள டாய்லெட் பேசினில், துடைத்து எறிந்த பேப்பர்களை உள்ளே போடுகின்றனர் எனத் தெரியவில்லை. துடைத்து விட்டு அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடாமல் (அலுப்பு போல !), உட்கார்ந்திருக்கும் பேசினில் போடும் அறிவிலிகளுக்கு என்ன வார்த்தை சொல்லித் திட்ட ?

அலுவலகத்தில் சேரும் போது, நிர்வாக மேலாளர் இதை பற்றி சொன்னார். நானும், "என்னடா இது பாத்ரூம் போனா தண்ணி ஊத்துன்னு.. குப்பையில போடுன்னு .." சொல்கிறார்களே என நினைத்தேன். ஆனால் இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது தான் அவர்கள் சொல்வது சரிதான் என தோன்றுகிறது.

இது கார்ப்பரேட் கம்பெனிகளில் மட்டுமல்ல. சினிமா தியேட்டர்கள், மால்கள், பெரிய ஓட்டல்கள் என பல பொது இடங்களில் இது போன்ற கேவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உச்சா இருந்துட்டு தண்ணி ஊத்து.. கழுவிட்டு பேப்பரை குப்பை தொட்டியில் போடு என சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்... இந்த படித்த முட்டாள்களுக்கு !?!?!!?


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

5 Comments:

Unknown சொன்னது…

Ethe mathirithaan vimal URINAL basinla yum bubble gum thuppivaikiranunga.....

ப.கந்தசாமி சொன்னது…

"சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை" என்று சொல்வார்கள். நியாயமாக அது டாய்லெட் உபயோகத்திற்கும் பொருந்தும்தான். ஆனால் மக்கள் இப்படி பொறுப்பற்று நடந்துகொண்டால் யார்தான் இதைத் திருத்த முடியும்?

Unknown சொன்னது…

காண்டம் போட்டதால் வந்த பழக்கமோ :)சில வருடம் முன் வந்த செய்தி ...அடைப்பு ஏற்பட்ட I T ஆபீஸ் டிரைனேஜ் பைப்பில் அள்ள அள்ள குறையாமல் வரும் காண்டம் !

விமல் ராஜ் சொன்னது…

@ Mathan Yesu, பழனி.கந்தசாமி , Bagawanjee KA :
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !!!

VK சொன்னது…

Vethanai... Mattra vendum... naam maara vendum....