செவ்வாய், 5 மார்ச், 2013

எனது வலைப்பயணம்


வணக்கம் !!!


எனக்கு எப்படி வலைப்பதிவு (blog) ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது என்பதை உங்களிடம் பகிர்கிறேன்.  கல்லூரி பருவம் முதல் (Web Designing) வெப் டிசைனிங், (blog) பிளாக் ஆகிய விஷயங்களில்  மிகுந்த  ஈடுபாடு.பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ,சாதாரண HTML பைல் ஒன்றை எழுதி அதற்கு இணைப்பு (link) கொடுத்து மகிழ்வேன். என்ன பதிவை போடுவது , எதை பத்தி எழுதுவது  என தெரியாமல் பிளாக்/ வலைத்தளம் உருவாக்கும் ஆசையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.

கல்லூரி படிப்புக்கு பிறகு, ஒரு தனியார் Call Center-ல் இரவு நேர வேலையில்  (நைட் ஷிப்ட் )  வேலை  செய்யும் பொது பிரபாகரன் என்பவர் தன்னுடைய தன் வலைப்பதிவு முலம் டீம் லீடர் முதல் மேனேஜர் வரை அனைவரையும் கவர்ந்துழுத்திருந்தார். அவருடைய பதிவுகளில் முக்கால்வாசி சினிமா விமர்சனங்களும், சில எதார்த்த சம்பவங்களும் ,ஒரு சில நல்ல கருத்துகளும்(!?!?!?) இருக்கும். நானும் அவருடைய  வலைப்பதிவின் ரசிகனானேன். அவரை பார்த்து எனக்கும் வலைப்பதிவு ஆரம்பிக்கும் ஆசை மீண்டும்  எட்டி பார்த்தது.

பிறகு அந்த கால் சென்டரை  விட்டு , வேறு சிறு கம்பெனியில்  வேலை 
செய்யும் போது , ஒரு வலைபதிவை  எப்படி நிரப்புவது என்பதை அறிந்து  கொண்டேன் . நாம் சொந்தமாக வலைப்பதிவு கட்டுரை (blog article) எழுத தெரியாவிட்டாலும் மற்ற வலைப்பதிவிலிருந்து காப்பி- பேஸ்ட் செய்யலாம் என அறிந்தேன். அட ! இது நல்ல யோசனையாக இருக்கவே முதலில் எனக்கு பரிச்சியமான Wordpress-ஐ தேர்ந்தெடுத்தேன். 


ஆரம்பத்தில் இணையதில் ஏதாவது ஒன்று எழுத வேண்டும் என ஆசை இருந்ததால் முதலில் சினிமாவை  பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் (நமக்கு தெரிந்தது அது தானே !! ஹ்ம்ம் ...கழுதை கெட்டால் குட்டி சுவர்!!! ).

அடுத்து தினசரி செய்தி வெளியிடும் வலை பதிவு எழுத  எண்ணினேன்.  நீண்ட யோசனைக்கு பிறகு எல்லாம் கலந்த ஒரு வலைபதிவை  ஆரம்பிக்க முடிவு செய்து "Vimal's Webworld" என்ற பெயரில் ஒன்றை கடந்த வருடம் ஜனவரி 6ஆம்  தேதி, ஆரம்பித்தேன்.  சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் வலைபதிவுகளை பகிர்ந்தேன். பார்பவர்களை  எல்லாம் அதற்கு லைக் போட சொன்னேன்.( ஹி..ஹி !!!எல்லாம் ஒரு விளம்பரம் தான் !!!)

 ஆரம்பித்த ஓரிரு வாரங்களில் என் வலை பதிவை தொழில்நுட்ப  வலைபதிவு என ஒரு சக வலைபதிவர் அவருடைய வலைப்பதிவில் போட, என் மனமோ ஆனந்த கூத்தாடியது. (ஏய் !!ஏய்!! நான் தான் !!நான் தான் !!நான் தான் !!). அதன் பிறகு என் வலைபதிவை தொழில்நுட்ப  வலைபதிவாக மற்றினேன். ஆறு மாதத்தில் 100 வலைப்பதிவு கட்டுரைகளை எழுதினேன். என்னோடைய  நாளடைவில் நேரமின்மை காரணமாகவும், நல்ல கட்டுரைகள்  கிடைக்காததலும் சிறிது மாதங்களுக்கு பதிவு ஏதும் போடவில்லை. 

மீண்டும் சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப பதிவுகளை போட ஆரம்பிதேன். அப்போதுதான் எனக்கு என்னமொரு வலைப்பதிவை ஆரம்பிக்க எண்ணம் தோன்றியது. நல்ல கவர்ச்சியான தலைப்பு வேண்டுமென யோசித்து,  பழைய பேப்பர்  என்ற ஒன்றை தொடங்கினேன். இதிலாவது  சொந்த கருத்துகளையும் (??!?!!) , கட்டூரைகளையும் போட வேண்டுமென எண்ணம் உள்ளது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என முழுமனதுடன்  இந்த பழைய பேப்பர் -ஐ   ஆரம்பிக்கிறேன்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

Related Posts:

  • வருக ! வருக ! என் வலைப்பதிவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி ! சும்மா பொழுது போக்கிற்காக ஆரம்பித்த இந்த வலை பதிவில் , எனக்கு தெரிந்த சில, பல விஷயங்களை உங்களிடம்… Read More
  • எனது வலைப்பயணம் வணக்கம் !!! எனக்கு எப்படி வலைப்பதிவு (blog) ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது என்பதை உங்களிடம் பகிர்கிறேன்.  கல்லூரி பருவம் முதல் (Web … Read More
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! வணக்கம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!! நாளை பிறக்க போகும் இந்த புதிய 2016 ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், … Read More

5 Comments:

Bharath team சொன்னது…

vaathukkal vimal.. arun here

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலையுலகம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

விமல் ராஜ் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் அவர்களே, வாழ்த்துக்கு நன்றி!!!

சீனு சொன்னது…

வாழ்த்துக்கள்... பாலோவர் விட்ஜெட் வையுங்கள்.....

விமல் ராஜ் சொன்னது…

நன்றி சீனு..
கண்டிப்பாக விட்ஜட் போடுகிறேன்