வியாழன், 14 மார்ச், 2013

சமமான கல்வியால் உயரும் சமுதாயம்


வணக்கம் !!!

ஓர் நல்ல சமுதாயம் வளர நல்ல சிந்தனையும், கல்வியறிவும் தேவை. அந்த கல்வி மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்படி கிடைத்தால் தான் நாட்டிற்கு நல்ல வருங்காலத்தை உருவாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறைப்படி அனைவருக்கும் சமமான கல்வியறிவு கிடைக்கிறதா ??????? அதை பற்றி இந்த பதிவில் பார்க்காலம்.

பண்டைய காலம் முதல் 200 ஆண்டுகள் முன்னால் வரை நம் முன்னோர்கள், கல்வி பயில குருகுலத்திற்கு சென்றார்கள். குருகுலம் என்பது ஆசிரியர் வீடாகவோ, கோவிலாகவோ, பொது மண்டபமாகவோ, குளக்கரையிலோ இருந்தது. குருகுலத்திலும் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளும், ஏழை பிள்ளைகளும் தனித்தனியே கல்வி பயின்றனர். குருகுலத்தில் பாடம் மட்டும் இல்லாமல் வீரம், சரித்திரம்,கலாச்சாரம் ஆகிய அனைத்தும் போதிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆண்பிள்ளைக்களுக்கே குருகுலத்தில் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது.


பிறகு, ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவரால் 1830-ல் நவீன கல்வி முறையில் தான் ஆங்கில வழி கல்வி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன.  இதில் தான் பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் முறை வந்தது. முதலில் இந்த முறை நன்றாக இருந்த போதிலும், காலப்போக்கில் கல்வி பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது தான் வருத்தமான விஷயம்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் கல்வியறிவு 80.33 சதவிகிதத்ததில் உள்ளது. எல்லா ஆட்சியிலும் உள்ள நலத்திட்டங்களில் இலவச கல்வியும், அனைவருக்கும் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் போதே
மாநிலம் முழுவதும் சமமான கல்வி கிடைப்பதில்லை.

இப்போதுள்ள கல்விமுறைப்படி, அதாவது மும்முறை தேர்வு முறையின் படியோ  அல்லது சமச்சீர் கல்வியின்படியோ (கடந்த ஆட்சியில்) அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் என்றால் அது சரியல்ல. தமிழகத்தில் மட்டும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் (ஸ்டேட் போர்டு), தமிழ்நாடு மேல் நிலை கல்வி வாரியம் (மெட்ரிக்குலேசன் ), ஆங்கிலோ இந்தியன்  கல்வி வாரியம்  என  வாரியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி திட்டங்களின் முலம் கல்வி கற்கும் மாணாக்கருக்கு சமமான கல்வி கிடைப்பதி. எப்படி என கேட்டல், உதாரணத்திற்கு ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனின் பாடத்திட்டமும், தனியார் பள்ளியில் (மெட்ரிக்குலேசன் மாணவனின் பாடத்திட்டமும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலும் அரசு/ அரசு உதவி பெரும் பள்ளியில், மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டங்களை விட உள்ளடக்கம் குறைவாகவே இருக்கிறது. அதே போல் மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டத்தில் இருப்பதை விட சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் உள்ளடக்கம்அதிகமாக இருக்கிறது. இதுதான்  சமமான பாடத்திட்டமா ??? இதில் படித்த/ படிக்கும் மாணவருக்கு எப்படி  சமமான  கல்வியறிவு கிடைக்கும் ???

என் கருத்துப்படி இதற்கெல்லாம் ஒரு வழி என்ன என்று கேட்டால், அரசே எல்லா கல்வி நிறுவனங்ககளையும் எடுத்து நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள எல்லா   பள்ளிகளிலும் சமமான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவையெல்லாம் உடனடியாக நடைமுறைக்கு  வராது என்று அறிந்த போதும்,வந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. ஏனென்றால் முக்கால்வாசி கல்வி நிலையங்கள் சிலஅரசியல்வாதிகளிடமும், பண முதலைகளிடமும் தான் உள்ளது.  நடைமுறைக்கு வந்தால் பலருக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே பள்ளிநிறுவனங்களை நடத்துபவரும்,அதில் பணிபுரியும் ஆசிரியருக்கும் மாற்று வழியை அரசு  செய்ய வேண்டும். அவர்களுக்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என்றாலும், சமமான கல்விக்கு இது ஓர் நல்ல ஆரம்பமாக அமையும்.நன்றி !!!

-பி .விமல் ராஜ்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

Philosophy Prabhakaran சொன்னது…

வலைப்பூ நன்றாக இருக்கிறது... ஆர்வத்துடன் பதிவுலகிற்குள் நுழையும் பலர் ஒரு சில இடுகைகளோடு காணாமல் போய் விடுகின்றனர்... அதுபோல அல்லாமல் தொடர்ந்து எழுத முயற்சிக்கவும்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் ஆதங்கம் மட்டுமல்ல... பலரின் ஆதங்கங்களும் நிறைவேறினால் நல்லது...

விமல் ராஜ் சொன்னது…

என் வலைப்பூவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி!!!! தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் பிரபா ..

விமல் ராஜ் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன், பலரின் எண்ணங்கள் நிறைவேறினால் நல்லதே !!!!