ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கொஞ்சம் சினிமாவைப் பற்றி ...

வணக்கம்,

என் வலைப்பூவில் (சினிமா ) திரைப்படம்  பற்றிய முதல் பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இதையே பற்றியே பதிவு செய்திருப்பதாலும் , திரை விமர்சனகளையோ, திரைக்கு பின்னால் நடப்பதையோ, வெள்ளித்திரை பற்றியோ பதிவு போடக்கூடாது என நினைத்திருந்தேன். அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை அக்குவேறாக, ஆணிவேறாக  பிரித்து மேயும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர்  இல்லை. ஆனாலும் எனக்கு சினிமா பார்ப்பது தான் பொழுதுபோக்கு, ஆர்வம், பலம், பலவீனம், எல்லாமே...

சமூக வலைத்தளமான யூ-ட்யுபில் (YouTube ) இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சில காணொளிகளை பார்க்க நேரிட்டது. அதை பற்றி எதோ எனக்கு தெரிந்ததை பதியலாம் என ஆரம்பிக்கிறேன்.

தமிழ் தவிர வேறு எந்த பிராந்திய மொழியும் தெரியாததால், மற்ற மொழி படங்களை பார்க்க ஆசையிருந்தும், வேற்றுமொழி படங்களையும், அந்த கதாநாயக(கி) களையும், கதை-வசனங்களையும் ரசிக்க முடிவதில்லை. தமிழில் பழசு முதல் புதுசு வரை எல்லா படங்களையும் பார்த்து ரசிப்பேன். (எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே !)

காணொளி 1:


முதலில் யூ-ட்யுபில் கண்டது, வெள்ளி திரையில் வெகு விரைவில் வரவிருக்கும் ஹிந்தி படமான "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்தின் "லுங்கி டான்ஸ் ப்ரோமோ" பாடல் தான். அந்த பாடல் சூப்பர் ஸ்டார்
ரஜினி காந்த்-க்காக காணிக்கை (TRIBUTE TO THALAIVA) என கூறி விட்டு, தலைவரை வெறும் ஒப்புக்கு சப்பாக உபயோகபடுத்தியுள்ளார், பாலிவூட் பாட்ஷா. படத்தில் சென்னை என்ற பெயர் வருவதாலும், காட்சிகளில் தமிழ் மக்களை லுங்கி அணிந்து அரிவாளோடு காட்டுவதாலும் ஒரு முன் ஜாக்கிரதைக்காக தான் ரஜினிக்கு இந்த ச்சிங் ..ச்சாக்...ஷாருக்கானுக்கு உண்மையிலேயே தலைவர் மீது மரியாதை என்றால் மும்பையிலேயே  எடுக்கப்படும் ஒரு படத்தில் இந்த பாட்டு வைத்து இருக்காலம். இதே காரணத்திற்காக தான் ஷாருக்கானின் முந்தைய படமான ரா.ஒன்  படத்திலும் ரஜினியை ஒரு காட்சியில் சும்மாச்சிக்கும் காட்டி படத்தை தென்னிந்தியாவில் விளம்பரபடுத்தினர். தலைவரும் பெருந்தன்மையோடு ஒத்து கொண்டு நடித்தார். பொதுவாக படத்திற்காக தான் ட்ரெயிலர் போடுவார்கள்..ஆனால் கான்,  ட்ரெயிலருகே  ட்ரெயிலர் போடுவார் போலிருக்கே!!!

நான் பிறமொழி படத்திற்கோ, அல்லது பிறமொழி நாயகர்களுகோ எதிரானவன் இல்லை. தலைவரின் பெருமையை வெறும் விளம்பரத்திற்க்காக உபயோகிகிறார்களே என்ற கடுப்புதான்.

காணொளி 2:


அடுத்து இன்று வெளிவந்த செல்வ ராகவானின் "இரண்டாம் உலகம்" படத்தின்  ட்ரெயிலர் . இந்தா, அந்தா என போக்கு காட்டி, இன்று இசையும்  ட்ரெயிலரையும் வெளியிட்டுள்ளது தயாரிப்பு தரப்பு. ஆயிரத்தில் ஒருவன் போலவே இதிலும் ஒரு பெரிய தொகை கிராபிக்ஸ் தொழில்நுட்பதிற்க்காக போடப்பட்டுள்ளது தெரியவருகிது. இதில் காதலுக்காக ஒருவன் (நாயகன் தான்) எவ்வளவு தூரம் தான் போவான் என்று ஆரம்பிக்கிறார்கள். தற்காலத்தில் நடப்பது போலவும், கனவுலகத்தில் நடப்பது போலவும் போலவும் காட்டப்படுகிறது. கனவுலகத்தில்,வித்தியாசமான ஜந்துகளும், வித்தியாசமான நிலப்பரப்பையும் காட்டியுள்ளனர். ஆக,ஆயிரத்தில் ஒருவன் போல கண்களுக்கு விருந்து நிச்சயம் உண்டு என நினைக்கிறேன்.  

காணொளி 3:


சில நாட்களுக்கு முன் வெளிவந்த விஜய் & விஜய் -ன்  "தலைவா"  படத்தின்
ட்ரெயிலர். ஏற்கனவே எல்லோரும் பார்த்து, கருத்து வெளியிட்டு பல நாட்கள் ஆகிவிட்ட போதிலும், படம் இந்த வாரகடைசியில் வெளிவருவதால், படம் எப்படி இருக்குமோ என எதிர்பார்ப்புதான் எனக்கு. 
 
முதலில் இது அரசியல் பற்றிய படம் என்று சொன்னார்கள், பிறகு, எல்லா தாதாயிச படங்களிலும் வருவது போல ஒரு சாதாரண மனிதன்  (common man) எப்படி மக்களின் தாதாவாக மாறி வில்லன்களுக்கு சுளுக்கு எடுக்கிறான் என்பதே கதை போல. (என் கணிப்பு தான்!) ஊறுகாயாக சந்தானமும், பேருக்காக அமலா பாலும் இருப்பதாக தெரிகிறது. அதனால் படம் நன்றாக இருக்காது  என சொல்லவில்லை; இருந்தால் தேவலை என்று தான் சொல்லுகிறேன்.

மீண்டும் வேறு சினிமா பதிவில் பார்க்கலாம்...

பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!!

நன்றி !!!    

-பி .விமல் ராஜ்

2 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

லுங்கி டான்ஸ் சூப்பர்...

தனிமரம் சொன்னது…

தலைவா போர் தான் போலும்:))))