சனி, 8 மார்ச், 2014

உங்க வீட்ல பெண்களே இல்லையா ???

வணக்கம்,

இன்று பெண்கள் தினமாம். எல்லோரையும் போல நானும் பேருக்கு ஃபேஸ்புக்கில் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என  ஸ்டேடஸ் போட்டுவிட்டேன். என்னதான் பெண்களைப் படிக்க வைத்தாலும், "இதுங்க எல்லாம் வேலைக்குப் போய் என்ன பண்ண போகுதுங்க?" என்று பெற்றோர் சிலரும் , "மாலை ஆறு மணிக்கு மேல் பெண்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் ? " என்று ஒரு மாநில முதல்வரே கேட்கும் சமூக லட்சணத்தில் தான் இப்போது நாம் வாழ்கின்றோம்.

இன்று காலை என் வீட்டில்,

"அம்மா! இன்னக்கி மகளிர் தினமாம். உனக்காக நான் என்ன செய்யணும் ? " - என்று கேட்டேன்.

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்பா... கடைக்குப் போய் அரை லிட்டர் பாலும், ரெண்டு சிப்ஸ் பாக்கேட்டும் வாங்கி வா.. அது போதும்.. "

"ம்ம்ம் ..போம்மா..அப்புறம் போறேன்... "

எனக் கூறிவிட்டு மீண்டும் என் வேலையைத் தொடந்தேன். மேற்கூறிய உரையாடல் போல உங்கள் வீட்டிலும், கணவன்-மனைவி ,
சகோதரி-சகோதரன், தாய்-மகன்களுக்கிடையே கண்டிப்பாக இது போன்று நடந்திருக்கக் கூடும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலும் இவர்களைப் போலவர்கள் தான் (என்னையும் சேர்த்து) வீட்டில் இருக்கும் பெண்களைச் சட்டை கூடச் செய்யாமல், மகளிர் தின வாழ்த்து ஸ்டேடஸ் போடுகின்றனர்.

இன்று பலரும் பெண்கள் தின வாழ்த்து செய்தியுடன், சாதனை பெண்மணிகளின் புகைப்படத்தையும், அவர்களின் சாதனைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஏன், இவர்கள் வீட்டிலெல்லாம்  பெண்களே இல்லையா??? இவர்கள் வீட்டில் அம்மா, மனைவி , சகோதரிகளேல்லாம் பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்கள் இல்லையென்றாலும், நம் கண் முன் கஷ்டப்பட்டு, படிக்க வைத்து, அரவணைத்து, அன்பு காட்டியவர்கள் அனைவரும் சாதனை பெண்கள் தானே ! பொது வாழ்வில் சாதனை செய்தவர்களைப் பார்த்து பெருமைப்பட வேண்டாம் எனச் சொல்லவில்லை. முதலில் நம் வீட்டுப் பெண்களுக்கு மரியாதை தருவோம் ; ஆதரிப்போம். பிறகு மற்றவரை பாராட்டல்லாம்...
 
womens_day_celebration_rangoli
பெண்கள் தினம் - மகிழ்ச்சியான பெண்கள் (அம்மா போட்ட கோலம்)
என்னைப் பொறுத்தவரை கல்பனா சாவ்லா, கிரண் பேடி, பெப்சி இந்திரா நூயி, பி.டி.உஷா, சாய்னா நேஹ்வால்,  நாட்டின் இன்ன பிற அரசியல் தலைவிகள் யாவரும் சாதனை பெண்மணிகள் தான் !!! வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் தான். ஆனால் இவர்களை எல்லாம் விட, என் கண்ணுக்குச் சாதனை பெண்களாகத் தெரிவது எங்கள் வீட்டுப் பெண்மணிகள் தான்! எனது அன்னையும், பாட்டியும், அக்கா, தங்கையரும் மற்றும் பெண் நண்பர்களும் தான் எனக்குச் சாதனை பெண்டீராகத் தெரிகின்றனர்.

இது போன்ற தினங்களெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நாம் கொண்டாடுவதில்லை. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், சன் தொலைக்காட்சிகளில், தீபாவளி, பொங்கலன்று போடுவது போல "அன்னையர் தின சிறப்புத் திரைப்படம்", "மகளிர் தின சிறப்புத் திரைப்படம் " என்று ஆரம்பித்தலால், அதிலிருந்து இத்தினங்கள் மறுக்க முடியாத விழாவாகி விட்டது.

நம் நாட்டைத் தாய் நாடு என்று சொல்லுகிறோம்; பேசும் மொழியைத் தாய் மொழி என்று கூறுகிறோம் ; நதிகளைப் பெண்களின் பெயரால் அழைக்கிறோம்; இயற்கையை அன்னை என்று சொல்கிறோம்; தமக்கைகளுக்காக ரக்ஷா பந்தன் கொண்டாடுகிறோம்;ஆவதும் பெண்ணாலே ! அழிவதும் பெண்ணாலே என்று பாடுகிறோம்; பெண் பாதுகாப்புக்கு பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வருகிறோம்;இவை அனைத்தும் இருந்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கொடுமைகளும் இன்னும் நம் நாட்டில் நடந்தேறிகொண்டு தான் இருக்கிறது. அக்கொடுமைகளை முழுமையாகச் சரி செய்ய முடியவில்லை என்றாலும், நிலைமையை ஓரளவு சீர் செய்துவிட்டு நாம் மகளிர் தினத்தை கொண்டாடுவோம்.

அனைவரும் பெண்மையைப் போற்றுவோம் ! பெண்ணித்தை காப்போம் !!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

7 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// முதலில் நம் வீட்டுப் பெண்களுக்கு மரியாதை தருவோம்; ஆதரிப்போம்; பிறகு மற்றவரை பாராட்டலாம்... ///

அப்படிச் சொல்லுங்க...! அருமை...

Yaathoramani.blogspot.com சொன்னது…

தலைவிகள் யாவரும் சாதனை பெண்மணிகள் தான் !!! வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் தான். ஆனால் இவர்களை எல்லாம் விட, என் கண்ணுக்குச் சாதனை பெண்களாகத் தெரிவது எங்கள் வீட்டுப் பெண்மணிகள் தான்! எனது அன்னையும், பாட்டியும், அக்கா, தங்கையரும் மற்றும் பெண் நண்பர்களும் தான் எனக்குச் சாதனை பெண்டீராகத் தெரிகின்றனர்.//

அருமையாகச் சொன்னீர்கள்
சிறப்புப் பதிவு வெக்கு வெகு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Firing Fox சொன்னது…

Vazhthukkal vimal

விமல் ராஜ் சொன்னது…

@ ரமணி ஐயா, திண்டுக்கல் தனபாலன் , முகமது ஜீபேர்..

வருகைக்கு மிக்க நன்றி !!!! தொடர்ந்து வருகை தரவும்...

Avargal Unmaigal சொன்னது…

///இவர்கள் வீட்டிலெல்லாம் பெண்களே இல்லையா??? இவர்கள் வீட்டில் அம்மா, மனைவி , சகோதரிகளேல்லாம் பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்கள் இல்லையென்றாலும், நம் கண் முன் கஷ்டப்பட்டு, படிக்க வைத்து, அரவணைத்து, அன்பு காட்டியவர்கள் அனைவரும் சாதனை பெண்கள் தானே ! பொது வாழ்வில் சாதனை செய்தவர்களைப் பார்த்து பெருமைப்பட வேண்டாம் எனச் சொல்லவில்லை. முதலில் நம் வீட்டுப் பெண்களுக்கு மரியாதை தருவோம் ; ஆதரிப்போம். பிறகு மற்றவரை பாராட்டல்லாம்..////


சுடும் உண்மைகள்....... உங்களின் நல்ல சிந்தனைக்கு பாராட்டுக்கள்.... மகளிர் தின பதிவுகளில் நான் படித்தவைகளில் உங்கள் பதிவும் கோவையை சேர்ந்த அகிலா அவர்கள் எழுதிய பதிவும் என் மனதில் தங்கி நிற்கின்றன.

இந்த மாதிரி கருத்துக்களை பதிவில் சொல்லும் போது அதை ஹைலைட் பண்ணி சிவப்பு கலரில் வெளியிடுங்கள் பதிவு முழுவதையும் அல்ல

சபாஷ் விமல் என்று உங்களை மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை

விமல் ராஜ் சொன்னது…

மிக்க நன்றி மதுரை தமிழா ! கருத்துக்கும், வருகைக்கும் !!!