வணக்கம்,
தமிழகத்தின் தென்கோடியில் ராமேஸ்வரத்தில் பிறந்து, பாரத தேசத்தில் எல்லா மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் 'பாரத் ரத்னா' Dr. APJ அப்துல் கலாம் அவர்கள்.
ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டு கொண்டிருந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது. கடலோரத்தில் பிறந்து, நிலங்கள் யாவும் சுற்றி, மக்கள் மனதை கவர்ந்து, அக்னி சிறகுகளால் பலருக்குள் இருந்த அக்னியை தூண்டிவிட்டு, மலை மேல் மறித்து, இன்று காற்றை போல நம்முள் நீக்கமற நிறைந்த ஓர் உன்னத தலைவர்.
அப்துல் கலாம் அவர்கள் ஒரு பெரும் அணு விஞ்ஞானி, மக்கள் போற்றும் முன்னாள் ஜனாதிபதி, கிட்ட தட்ட இந்தியாவிலுள்ள எல்லா மாணவ /மாணவிகளின் முன் மாதிரி, எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகம் கொண்டவர் . இதையெல்லாம் விட சிறந்த எளிமையான மனிதர் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமுமில்லை.
இந்தியா 2020 -ல் வல்லரசாக மாறும் என்பதை நம் மனதில் விதைத்தவர். கனவு காணுங்கள் என்று சொன்னவர். அந்த கனவை மெய்பட வைக்க, நாம் அயராது உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
காந்தி இறந்துவிட்டார், காமராஜர் இறந்து விட்டார், அண்ணா இறந்து விட்டார் என நாட்டை நேசித்த , மக்களை கவர்ந்த பெரும் தேசதலைவர்களின் இழப்பை ஒரு வரலாற்று செய்தியாகதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இத்தலைமுறையில், இன்று தான் உண்மையில் நாம் அனைவரும் விரும்பிய ஒரு நல்ல மனிதரின் இழப்பினை நிகழ்காலத்தில் காண்கிறோம்.
கட்சி, சாதி/ மதம், மொழி, துறை பாகுபாடு என எதுவும் இல்லாமல் எல்லாராலும் மதிக்கப்படும் சிறந்த மனிதரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
அவரின் கனவை உண்மையாக்க முயற்சி செய்வோம்.
"அப்துல் கலாமை பார்த்து நாம் பெருமைப்பட்டது போதும்...
அப்துல் கலாம் நம்மை பார்த்து பெருமைபடட்டும்"
என்ற எனது நண்பரின் கவிதை வரிகள் தான் தான் நினைவுக்கு வருகிறது.
நன்றி !!!
-பி .விமல் ராஜ்

3 Comments:
//அப்துல் கலாமை பார்த்து நாம் பெருமைப்பட்டது போதும்...
அப்துல் கலாம் நம்மை பார்த்து பெருமைபடட்டும்"/
செம.. உங்கள் நண்பரின் கவிதை..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு.
ஆழ்ந்த இரங்கல்கள்....
கருத்துரையிடுக