வணக்கம்,
மகா ஜனங்களே!!! ஒரு நிமிஷம். தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ கில்மா சம்பந்தமான பதிவு என நினைத்து அவசரமாக லிங்க் கிளிக் பண்ணி உள்ளே வந்திருந்தால், மன்னிக்கவும். இது அது போன்ற பதிவு அல்ல. இப்போ மேலே படிக்கலாம்.
பொதுவாக கணவன் மனைவி ஜோக்குகளில், மனைவியை கிண்டல் செய்வது போல தான் பெரும்பாலும் இருக்கும். நான் பேச்சுலராக இருக்கும் போது அதையெல்லாம் படித்து விட்டு, எப்படி இந்த மொக்கை ஜோக்குக்கெல்லம் சிரிக்கிறார்கள் என யோசித்து கொள்வேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அதன் முழு அர்த்தமும் புரிய ஆரம்பித்தது. பின்னர் அந்த ஜோக்குகெல்லம் நானும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். நான் மட்டுமல்ல...பெரும்பாலானோர் இப்படிதான்.
ஏன்?? ஏனென்றால் அந்த கதையிலோ, சிரிப்பிலோ வரும் சம்பவம் அவரர் வீட்டிலும் ஏதோ ஒருமுறையேனும் அப்படிப்பட்ட காட்சியோ/ வாக்குவாதமோ நடந்திருக்கும். அதனால் தான் கணவன் மனைவி ஜோக்குகளுக்கு எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த சிரிப்புகளில் வருவது போல எல்லா பெண்களும் கணவனை சந்தேகிப்பார்களா ? கொடுமை படுத்துவார்களா ?? நிறைய கண்டீஷன் போடுவார்களா ??? இல்லையெனில் ஓயாமல் திட்டி கொண்டே இருப்பார்களா???
கோபம், ஆசை, வெறுப்பு, அன்பு, சந்தேகம், பாசம், இவை அனைத்தும் ஆண் - பெண் ( கணவன் - மனைவி) இருவருக்குமே இருக்கும். இதையெல்லாம் கடந்து தான் போக வேண்டும். எல்லார் வீட்டிலும் இதே கதை தான்.
ஒரு திரைப்பட கலைவிழாவின் போது ஒரு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சொன்ன வாழ்வின் ரகசியம் இது. மனைவிமார்கள் எப்பொழுதும் அவர்கள் சொல்வதையே கணவன்மார்கள் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது சில நேரங்களில் நடைபெறாத பொது கோபம், சண்டை போன்றவை வரும். இதற்கு ஒரே வழி. விட்டு கொடுத்து போவது தான்.
ஒரு சண்டை/ விவாதம்/ அல்லது கருத்து வேறுபாடு போன்ற சமாச்சாரங்களில் கணவன் விட்டுக்கொடுத்து மனைவி ஜெயிப்பது போல காட்டிகொண்டால், ஒரு பிரச்னையும் வராது (உண்மையில் கணவன் சொல்வது தான் நடக்கும்). கணவன் ஜெயிப்பது ஒரு முறை மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும், தோற்று போய் மனைவியின் (அன்பை) ஜெயிக்கலாம். பெண்களுக்கு அவர்கள் ஜெயிப்பது போல இருந்தாலும் நாம் தான் இறுதியில் வெல்கிரோம். மனைவியிடம் ஜெயிப்பதை விட குடும்ப வாழ்க்கையில் ஜெயிப்பதே முக்கியம்.
இது தான் உண்மையான வாழ்வின் ரகசியம். இதை தான் பெரும்பாலானோர் பின்பற்றுகிறார்கள்.நானும் தான்! இந்த ரகசியம் அறிந்த பின், இதை மட்டும் பின்பற்றி பாருங்கள். பிறகு தெரியும் வாழ்வின் இனிமை பற்றி... இனிய வாழ்க்கை ஆரம்பிக்கட்டும்!
நன்றி!!!
பி.விமல் ராஜ்

3 Comments:
Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuff.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
சூப்பர் article, நான் கண்டிப்பாக follow செய்வேன் நண்பா
wow it's best one
The Best Face Serums for Each Skin Concern
கருத்துரையிடுக