புதன், 15 ஜூலை, 2015

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா?

வணக்கம்,

இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் ஷாப்பிங் தான் இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் டிரெண்ட். எலக்ட்ரானிக் பொருட்கள், துணிமணிகள் முதல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, உப்பு, புளி, மிளகாய் வரை எல்லாமே இப்போது இணைய வியாபாரிகளிடம் எளிதில் கிடைத்து விடுகிறது.

முதலில் சற்று வசதி படைத்தவர்கள் மட்டுமே ஆன்லைனில் வாங்கி கொண்டிருந்தனர். பின்னர் சாமான்ய மக்களும் கணினி மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது கணினி மூலம் வாங்குவதை விட, மொபைலில் ஆன்லைன் வர்த்தகம் செய்வது அல்லது பொருட்கள் வாங்குவது மக்களிடம் வாடிக்கையாகிவிட்டது.

இந்த ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களுக்கு, இவ்வளவு குறைந்த விலையில் கொடுத்தாலும் எப்படி கட்டுப்படி ஆகிறது என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஷோரூம் வைத்து பொருட்களை கடைவிரித்து, பொதுமக்களிடம் விளக்கி விற்பதை விட, ஆன்லைனில் விற்பது சுலபம் . சுலபத்தை காட்டிலும் லாபம் அதிகம். கடையின் வாடகை, கரண்ட் பில், வேலை செய்பவர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவு என நேரில் விற்பதுக்கு செலவு அதிகம். ஆனால் ஷாப்பிங் வெப்சைட்காரர்கள், வெறும் குடோனில் சரக்குகளை சேமித்து கொண்டு, நுகர்வோர்/வாடிக்கையாளர்களுக்கு கேட்டவாறு பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள்.


ஆன்லைன் ஷாப்பிங்க்கு ஏன் இவ்வளவு மவுசு?

1) 2005-ல் பிராட்பேண்ட் இணைய சேவை வந்த போது மெல்ல மெல்ல ஆரம்பித்தது ஆன்லைன் ஷாப்பிங் மோகம். போக்குவரத்து சிக்கலில் மாட்டாமல், கடைவீதியின் கூட்ட நெரிசலில் சிக்காமல், கடை கடையாய் ஏறி இறங்காமல், வீட்டில் இருந்தபடியே கணினி முன் அமர்ந்து வாங்குவது சுலபம்.

2) நேரில் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் மலிவாக இருப்பதால், மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

3) பொதுமக்களின் தேவையை அறிந்து கொண்டு, இணைய வியாபாரிகளிடையே போட்டி அதிகமாகி விட்டது. ஆளாளுக்கு பொருட்களை 'போத்திஸ் ஆடி தள்ளுபடி ஆஃபர்' போல கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

4) Credit Card, Debit Card மற்றும் Debit Card  மூலம் பண பரிவர்த்தனை செய்யபடுவதால், வாடிக்கையாளருக்கு ஆன்லைனில் வாங்குவது மிகவும் சுலபமாக இருக்கிறது.

5) மேலும் Cash On Delivery  மற்றும் Free Home Delivery வசதியும் பல இணைய வியாபாரிகள் கொடுப்பதால், 'கையில காசு வாயில தோசை' என்று நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். வீட்டிலேயே பொருள் வந்து ஓசியிலேயே இறங்கி விடுவதால், வாடிக்கையாளருக்கு கஷ்டமே இல்லை.

6) எல்லாவற்றக்கும் மேலாக, வாங்கிய பொருள் சேதபட்டிருந்தாலோ,  சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ,  30 நாட்களில் உங்கள் முழு பணமும் வாபஸ் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை பெரிதும் கவர்ந்து விட்டன.

online-shopping
click to enlarge image 

ஆன்லைன் ஷாப்பிங் தில்லு முல்லு:

மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு சுலபமான வர்த்தகமாக தான் தெரியும். ஆனால் இதிலுள்ளும் பல தில்லு முல்லுக்கள் நடப்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது. அவற்றுள் சில:

1) ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வர வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு,
  •  XL அளவு சட்டை கேட்டால், M அளவு சைஸ் சட்டை வரலாம். 
  • அதே போல, ஆர்டர் செய்த நீல நிற டி-ஷர்ட்டுக்கு பதிலாக அதே பிராண்டில் பச்சை நிற டி-ஷர்ட் வரலாம்.  
பேஸ்புக்கில் பகிரபடுவது போல, மொபைல் போன் ஆர்டர் செய்தால் சோப்பு டப்பாவோ,  ஐ-போட் பதிலாக செங்கலொ, வேறு பொருளுக்கு பதிலாக வெறும் காலி டப்பாவோ வர வாய்ப்பே இல்லை. அதெல்லாம் இணைய வியாபாரிகளின் எதிரி நிறுவனங்களின் வியாபார சூழ்ச்சியே ஆகும். 

2) ஆர்டர் செய்த பொருள் தாமதமாக வரலாம். 10 நாட்களில் வரவேண்டியது,  25 நாட்களில் வந்தடையும் போது வாடிக்கையாளருக்கு எரிச்சல்தான் வரும். ஆர்டர் செய்த பொருள் வராமல் கூட போகலாம். உங்கள் ஊரில் எளிதில் கிடைக்கும் தன்மை இல்லாததால், பொருள் தாமதமாகவோ அல்லது கிடைக்காமலே இருக்க கூட வாயுப்புண்டு.

3) சில இணைய வியாபாரிகள், போலியான ஆஃபர்களை காட்டி மக்களை எமாற்றிவிடுகின்றனர். 20,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை வெறும் 2000 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளுங்கள். குறுகிய கால ஆஃபர் மட்டுமே! முந்துபவர்களுக்கே முன்னுரிமை! என்று  கவர்ச்சி வார்த்தைகளில் வலை விரிக்கின்றனர். சில ஏமாளிகளும் வசமாக வலையில் சிக்கி கொள்கின்றனர். பொதுவாக இத்தகைய ஆஃபர்களை பயன்படுத்தும் போது, அவை தரமான, நம்பிக்கையான இணையதளம்தானா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்.

4) சில இணைய தளங்களில், போலியான பொருட்களை வாடிக்கையாளர் தலையில் கட்டி விடுகின்றனர், உதாரணத்திற்கு, சோனி (SONY) கம்பெனியின் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தால், சோனி (SONYY) என்ற போலியின் பொருளை அனுப்பி விடுகின்றன்ர்,

4) மிக முக்கயமானது இது. வாங்கும் சில பிராண்டட் பொருட்களுக்கு வாரண்டி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். சில இணைய வியாபாரிகள் வாரண்டி இல்லாமலேயே பொருட்களை விற்று விடுகின்றனர். ஆஃபர்களை பெரிதாக காட்டிவிட்டு வாரண்டி இல்லை என்பதை சிறு எழுத்துகளில் வலைபக்கத்தின் கடைசியில் எழுதி வைக்கின்றனர்,

5) இன்னும் சில முன்னணி நிறுவனங்கள், இந்த இணைய வியாபாரிகள் எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இல்லை என்று அறிவித்து விடுகின்றனர்.

Flipkart, Snapdeal and Amazon not our authorized resellers - Lenovo 
http://goo.gl/7wA0yw

6) அசல் விலையை விட கூடுதலாக விலை போட்டு, வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றனர்.  சில நாட்களுக்கு முன், ப்ஃளிப்கார்ட்டில் 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை 399 ரூபாய் என்று கூறி விற்பனைக்கு வைத்துள்ளனர். அந்த படத்தை ஜூம் செய்து பார்க்கும் போது, அந்த செருப்பிலேயே அதன் விலை 399 ரூபாய் தான் என்று போடப்பட்டுள்ளது. இதை விட பள்ளி சிறுவர்கள் எடுத்து செல்லும் ஒயர் கூடை 1,250 ரூபாய் என்று விற்கப்பட்டுள்ளது. இது போல பல பொருட்களின் விலையை மாற்றி போட்டு ஏமாற்றி விடுகின்றனர் ஆன்லைன் வர்த்தகர்கள்.

click to enlarge flipkart frauds
click to enlarge image 

8) மேலும், ஆன்லைனில் பழைய பொருட்களை வாங்கி விற்பவரும் ஏமாற்ற படுகின்றனர். பொருளை பார்க்காமல், சோதிக்காமல் பண பரிவர்த்தனை செய்து  ஏமாந்து விடுகிறார்கள்.

தொழில்நுட்பம் வளர வளர நம்மை சோம்பேறிகளாகவும், ஏமாளிகளாகவும் மாற்றி கொண்டிருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் இது போல பல கோல்மால்கள் இணையத்தில் நடக்க வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர், கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

8 Comments:

ப.கந்தசாமி சொன்னது…

எப்படி உஷாராக இருப்பது? பொருளை விற்கும் கம்பெனியைப் பற்றி நாம் எப்படித்தெரிந்து கொள்ள முடியும்? அவர்களை நம்மை ஏமாற்றினால் நாம் அதற்கு எப்படி நிவாரணம் தேட முடியும்? நேரில் பார்த்து வாங்கும்போதே பல தில்லு முல்லுகள் நடக்கின்றன. சட்டபூர்வமாக கட்டுப்பாடுகள் வந்தால் நல்லது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொண்டு வருபவர்களே பிரித்து காட்டும் வரை கொஞ்சம் பொறுமையோடு இருந்தால் பலவற்றிலிருந்து தப்பிக்கலாம்...!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் !

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி !
சட்டம் இருக்கிறது, ஆனால் சட்டம் தான் இல்லை....

Jayakumar Chandrasekaran சொன்னது…

நான் கடந்த மூன்று வருடங்களாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறேன். சோப்பு முதல் மொபைல் வரை வாங்கி இருக்கிறேன். பெரிய ஏமாற்றம் என்பது ஒரு தடவை ஒரு B P Monitorக்கு பணம் கட்டிவிட்டு (1250 ரூபாய்) கம்பனி காணாமல் போய் விட்டது (TIMTARA).
சில சிறிய பொருட்கள் ஆர்டர் செய்த போது வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதை தெரியப்படுத்தியவுடன் கட்டிய பணம் திரும்ப கிடைத்து விட்டது. இது இரண்டு தடவை நிகழ்ந்தது. பணம் ஒன்றும் அதிகம் இல்லை 200க்கும் கீழ் தான்.

கடைசியாக மொபைல் ஒன்று வாங்கினேன். நன்றாக இருக்கிறது.

புத்தகங்கள் வாங்க நான் எப்போதும் amazon தளத்தையே உபயோகிக்கிறேன். மலிவு மற்றும் எல்லா புத்தகங்களும் கிடைக்கும்.

ஆன்லைனில் நான் வாங்காத பொருள் இல்லை (மசாலா பொடி) உட்பட.
--
Jayakumar

'பரிவை' சே.குமார் சொன்னது…

கொண்டு வருபவர்கள் பிரித்துக் காட்டுவார்களா என்ன?
நல்ல பகிர்வு.

rajamelaiyur சொன்னது…

எல்லாரும் கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பாஸ் ... அருமையான பதிவு

Admin சொன்னது…

வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.